Wednesday, May 12, 2010

சாந்தாமணியும் இன்ன பிற நாவல் கதைகளும் - தமிழ்நதி

விதி வலியது’ன்னு சொல்றதுல எதோ இருக்குன்னுதா தோணுது. இல்லேன்னா ‘சொற்கப்பலும் தக்கையும் சேர்ந்து நடத்துற கூட்டத்துல வந்து கருத்துரை சொல்லுங்க’ன்னு அஜயன் பாலா என்னைக் கூப்பிட்டிருக்கமாட்டார். நானும் பொட்டியத் தூக்கிட்டு சேலத்துக்கு பஸ்ஸேறிப் போயிருக்கமாட்டேன். அதெல்லாஞ் சிக்கல் இல்லே. வா.மு.கோமுவோட ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’பத்தி நான் கருத்துரை சொல்றேனேன்னு என்னய சொல்லவைச்ச பல்லி எதுன்னு தெரியலை. ‘விதிங்கிறாங்க… பல்லிங்கிறாங்க… சரியான பிற்போக்குவாதியா இருப்பாங்க’நல்லாப் படிச்ச செலபேர் கதைய அவுத்து விடுவீங்கன்னு எனக்குந் தெரியுது. உப்பு,புளி,காரசாரத்துக்காக இதெல்லாம் எழுதிக்கிறதுதான தவிர்த்து வேற புனித நோக்கம் ஒண்ணுங் கெடயாது.

ஆங்… அந்தப் புத்தகம் கைல இருக்குங்றதனால அதைப் பத்திக் கருத்துச் சொல்றதா ஒப்புக்கிட்டனோ என்னமோ…. அந்தப் புத்தகத்த மொதல்லயும் ஒருவாட்டி புரட்டிப் பாத்திருக்கேன். எப்பிடி எப்பிடிப் படுத்துக்கலாம்னு செல விசயம் கண்ணுல படத்தான் செஞ்சுது. ஆனாலும், புத்தகம் முழுசுமே வில்லங்கம் விவகாரம்னு தெரிஞ்சிருந்தா வேணாஞ் சாமீன்னு ஒதுங்கியிருப்பேன்.

அண்மைல (அண்மைங்கிறது இலக்கிய காலத்துல எத்தனை வருஷங்கிறது நமக்கெல்லாம் தெரியும்) வெளியாகியிருக்கிற ஆறு நாவல்களப் பத்தின கூட்டம் அது. தாண்டவராயன் கதை (பா.வெங்கடேசன்), நிலாவை வரைபவன் (கரிகாலன்), துருக்கித் தொப்பி (கீரனூர் ஜாகிர் ராஜா), சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் (வா.மு.கோமு), நெடுஞ்சாலை (கண்மணி குணசேகரன்), வெட்டுப்புலி (தமிழ்மகன்) இந்த ஆறைப் பத்தியுந்தான் விமர்சனக்கூட்டம். இது மே மாசம் 8ஆந் திகதி நடந்தது. ஆண்டு ஒங்களுக்கெல்லாந் தெரியும். நடக்கிற நடப்பைப் பாத்தா 2010இல புத்தகம் வெளிவந்தா 2020ல தாங் கூட்டம் போடறாங்கன்னு நீங்க சொல்வீங்க. சேலத்துலயும் நல்ல வெயில் காயுது. சிவகாமி அம்மையப்பர்னு ஒரு பள்ளிக்கூட மரநிழல்லதான் கூட்டம் நடந்துச்சு. இந்த வெயில்ல எப்டித் தாக்குப் புடிக்கப்போறம்னு ஆரம்பத்துல தோணிட்டே இருந்துச்சு. அப்றம் விமர்சனக்கூட்டத்துல பறந்த சூட்டுல வெயில் சூடு அடங்கிப்போச்சு. ஆனா ஒண்ணு சொல்லிக்கணும். வழக்கமான இலக்கியக் கூட்டம் மாதிரி இல்லை இது. மேடைல பத்துப் பேர் ஏறி ஒக்காந்துக்கிட்டு சபைல இருக்கிறவங்க விடுற கொட்டாவியைக் கண்டுக்காம இஷ்டத்துக்குப் பேசிட்டே போற வில்லங்கம்லாம் இதுல இருக்கலை. எல்லாரும் பேசினாங்க. எல்லாரும் கேட்டுக்கிட்டாங்க, செலபேரு கேட்காம சத்தம் போட்டாங்க. அதிகமா முக்கல் முனகல் வந்தது எதுக்குன்னு கேட்டீங்களானா ‘சாந்தாமணி’க்குத்தான்.

‘தாண்டவராயன் கதை’படிக்கப் படிக்க மறந்து பின்னால போயிட்டே இருந்துச்சுன்னு ஸ்ரீநேசன் சொன்னதுபோல ஒரு மறதி கூட்டம் முடிஞ்சதும் எனக்கும் வந்திருக்கு. ஆனாலும், ஞாபகத்துல என்னெல்லாம் இருக்கோ அதெல்லாம் எழுதிப்புடலாம்னு நெனைக்கிறேன். இல்லைன்னா வரலாற்றைப் பதிவு பண்ணலேன்னு யாராச்சும் சொல்லிடுவாங்க பாருங்க. இதே வரியை நீங்க வேற ஒருத்தரோட பதிவுலயும் சமீப காலங்கள்ல படிச்சிருப்பீங்க. ஜமாலனோட வலைப்பூவிலன்னு நெனைக்கிறேன்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமைலதான் கூட்டம் நடந்துச்சு. அஜயன் பாலா கூட்டம் தெசைமாறிப் போயிடாம ‘வந்த வேலையை ஒழுங்காப் பாக்கணும்’ங்கிற தோரணையோட கூட்டத்தை நடத்தினார். தக்கை பாபு நன்றியுரை சொன்னார். வரவேற்புரை சொன்னது ஈசன் இளங்கோன்னு நெனைக்கிறேன். கடேசிவரைக்கும் ரொம்ப ஒழுங்கும் அமைதியும் காத்த ஒருத்தரைச் சொல்லணும்னா கூட்டத்துக்குத் தலைமை தாங்கின சுப்ரபாரதிமணியனத்தான் சொல்லியாவணும். அஜயன் பாலா, தக்கை பாபு, விஷ்ணுபுரம் சரவணன், கண்டராதித்தன், அய்யப்ப மாதவன், சந்திரா, சக்தி அருளானந்தம், கீதாஞ்சலி பிரியதர்ஷினி, தமிழ்நதி(நாந்தான்), தமிழ்மதி, (அவங்க கூட இன்னொருத்தங்க பேர் தெரியலை) ஜோஸ் அன்றாயின், (தமிழ்க்காரர்தாங்க) இசை, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன், (பக்கத்துல பக்கத்துல எப்பவும் வந்துடுவாங்க)ஸ்ரீநேசன், சாஹிப்கிரன், அசதா, வா.மு.கோமு, சிபிச்செல்வன், க.மோகனரங்கன், பால்நிலவன், தூரன் குணா, மு.ஹரிகிருஷ்ணன், கண்ணன் இப்டி கணிசமான கவுஞ்ஞர்களும் எழுத்தாளர்களும் பார்வையாளர்களும் வந்திருந்தாங்க.

நிலாவை வரைபவனை வரைஞ்ச கரிகாலன் எதோ சோலி இருக்குன்னுட்டு வரலை. காலைல நடந்த முதல் அமர்வில கரிகாலனோட புத்தகத்தைப் பத்தி அசதா பேசினார். நான் அப்போ என் கருத்துரைய அச்சுல எடுத்துட்டு வராத கடுப்புல இருந்தேன். அதனால அத சரியா கவனிக்க முடியலை. ஆனா அந்தக் கட்டுரையை வளர்மதி முகப்புத்தகத்துல எடுத்துப் போட்டிருக்காரு. ‘நான் அண்மைல படிச்ச கட்டுரைகள்ள இதுவும் முக்கியமானது’னு வளர்மதி அதுல சொல்லியிருக்கார். அதப் படிக்கலாம்னுட்டு தேடிப் பாத்தா கெடைக்கலை. காரணம் என்னோட முகப்புத்தகத்துல வளர்மதி எப்டியோ விடுபட்டுப் போயிருக்கிறார். அசதாவோட பக்கத்துலயும் கெடைக்கல. அடிக்கடி பேசாட்டி இப்டித்தான். சேத்துக்கச் சொல்லி ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்கேன். அப்புறம் கீரனூர் ராஜாவோட ‘துருக்கித் தொப்பி’பற்றி இளங்கோ கிருஷ்ணன் ஒரு அருமையான கட்டுரை வாசிச்சார். ரொம்பவே மெனக்கெட்டு எழுதின கட்டுரையா அது இருந்துச்சு. ஒரு ஆய்வுக் கட்டுரையோட நேர்த்தி அதுல இருந்ததா அஜயன் பாலா சிலாகிச்சுச் சொன்னார். கீரனூர் ஜாகிர் ராஜாவோட மற்ற நாவல்களையும் மத்த முஸ்லிம் எழுத்தாளர்களால தமிழ்ல எழுதப்பட்டிருக்கிற நாவல்களையும் பத்தி கொஞ்சநேரம் கூட்டத்துல பேச்சு ஓடிட்டிருந்துச்சு.

அப்புறம் சாஹிப்கிரன் வா.மு.கோமுவோட ‘சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும்’பற்றி கட்டுரை வாசிச்சார். ஆ… அதுக்கு முன்னாடி வா.மு.கோமுவை மணல்வீடு ஹரிகிருஷ்ணன் அறிமுகம் செய்ஞ்சுவைச்சுப் பேசினார். ‘அவர் என்னோட வாத்யார். அவர் எழுத்துக்கள நான் காதலிக்கிறேன்’அப்டீன்னு ஆரம்பிச்சு அவருக்கேயுரிய மண்வாசனை நடைல சுவாரசியமாப் பேசினார். சரிதான் அப்டீன்னு நெனைச்சுக்கிட்டேன். ‘இதுவொரு இன்பமூட்டக்கூடிய எழுத்து… ஆனாலும், ஏனைய விடயங்களிலும் வா.மு.கோமு கவனஞ் செலுத்தியிருக்க வேணும்’ங்கிற ரீதியில சாஹிப்கிரனோட பேச்சு அமைஞ்சிருந்துச்சு. எதோ சொல்ல வந்து சொல்ல வந்து சொல்லாம தொண்டைக்குள்ள இறுக்கிப் பிடிச்சுக்கிட்ட மாதிரி ஒரு விமர்சனக் கட்டுரை அது. அப்றந்தான் ஆரம்பிச்சுது வெனை. ‘யாராச்சும் கருத்துச் சொல்லுங்கப்பா’ன்னார் அஜயன். நான் கம்யூட்டர்ல தட்னத பேப்பர்ல எடுத்துட்டுப் போகலை. சேலத்துல அப்போ மின்சாரம் அறுந்திருந்த நேரம். சரிதான்னுட்டு ஞாபகத்துல இருந்தவரைக்கும் எங் கருத்தைச் சொன்னேன். நான் என்ன பேசுனேன்கிறதோட சாரம் இதுதாங்க:

“நான் இந்தப் புத்தகத்தப் பத்தி கருத்துரை சொல்றதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்லியாகணும். அதாவது நான் ஒரு அடிப்படைவாதி கெடையாது. அப்றம் இந்தக் கற்பு, கலாச்சாரம் ஒழுக்க மதிப்பீடுகள்ளயும் கறாரான ஆள் இல்லை. நான் தமிழ்ல ஒரளவுக்கு படிச்சுக்கிட்டிருக்கிற ஆள்தான். அதனால இதையொரு நாவல்னு என்னால ஏத்துக்க முடியலை. இந்தப் புத்தகத்த நான் வாசிக்க ஆரம்பிச்சு ஒரு நூறு பக்கத்துக்கு மேல போனப்புறமும் என்னால கதையோட ஒன்ற முடியலை. பள்ளிக்கூடத்துல படிக்கிற பழனிச்சாமி சாந்தாமணியை விரட்டி விரட்டிக் காதலிக்கிறான். அவ அவனைப் பாக்காம மூஞ்சியத் திருப்பிக்கிறா. பழனிச்சாமிய ஜான்சி காதலிக்கிறா. அப்றம் பழனிச்சாமி ஜான்சியோட சில்மிஷம் பண்றான். சாந்தாமணி கதை முடிஞ்சப்புறம் பழனிச்சாமி அவளோடயும் இவளோடயும் எவளோடயும் படுத்துக்கிறான். அவன் எப்டி எப்டியெல்லாம் யார் யாரோடல்லாம் படுத்துக்கிறாங்கிறதப் பத்தின பக்கம் பக்கமான விஸ்தாரமான விவரிப்புதா இந்த நாவல். என்னடாது இப்டி வில்லங்கமாயிருக்கேன்னு முன்னுரையப் போய்ப் படிச்சுப் பாத்தா ‘இந்தக் கதைல வர்ற கீதாவும் பழனிச்சாமியும் அவளும் இவளும் இப்பயும் இருக்கத்தான் இருக்காங்க. இதெல்லாம் அசாத்தியம்னு நீங்க நெனைக்கப்படாது’ன்னு எழுதியிருக்காரு. இதெல்லாம் தனக்கு பாதகமான எதிர்வினை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு அதத் தடுக்க கவசமா முற்கூட்டியே எழுதிவைக்கிறது. பக்கம் பக்கமா பாலியலை எழுத்தா நிரப்பி வைச்சிருக்கிறதத் தவிர்த்து வா.மு.கோமுவோட இந்தப் புத்தகத்துல ஒண்ணுங் கெடயாது. காமத்தை எழுதக்கூடாதுன்னு நாஞ் சொல்லவரலை. நானுங்கூட எழுதியிருக்கேன். ஆனா, எழுத்துக்குள்ள காமம் வரலாம். காமம் மட்டுமே எழுத்தாயிருந்தா அதுக்கு வேற பேரு.

சில இணையத்தளங்கள் கலவியை மிருக சர்க்கஸா, மாமிசக்கூடலா மலினமாக்கிட்ட அதே வேலையை இலக்கியமுஞ் செய்றது சரிதானா? காமம் ஒண்ணும் பாவம் கிடையாது. ஆனாலும், காமத்தினால் மட்டுந்தான் இந்த உலகம் இயங்கிட்டிருக்கிறதுமாதிரியான ஒரு சித்திரம் இந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டிருந்தப்போ கெடைச்சுது. போர்க்களத்துல பிணங்களா விழுந்து கிடக்கிறது மாதிரி இந்தப் புத்தகம் நிறைய உடல்களா அவிழ்ந்து கிடக்குது. உயிர்மை கூட்டத்தில இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசின முருகேசபாண்டியன் சொன்னார்.“இதைப் படிக்கிறபோது பெண்கள் எல்லோரும் பாவாடை நாடாவை அவிழ்த்து கையில வைச்சுக்கிட்டு ரெடியா இருக்கிறமாதிரி தோணுச்சு”ன்னு. எனக்கும் அதே கருத்துத்தான். இந்த சமூகத்தில இருக்கிற அநேகமான பெண்கள் காமம் என்கிற தீர்க்கமுடியாத கொடிய வியாதியினால பீடிக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் அந்தரிச்சு அலமலந்து ஓடித்திரிவதான ஒரு காட்சி என் மனக்கண்ணில வந்துபோச்சு. பெண்களை இந்த நாவல்ல ரொம்ப மலினப்படுத்தியிருக்கிறதா எனக்குத் தோணுது.


இந்தப் புத்தகத்துல வர்ற பழனிச்சாமி என்கிற ஆளுக்காக பெண்கள் வரிசையா நின்னுக்கிட்டு ஏங்கிறதைப் பார்த்தா மகாக்கொடும்மையா இருக்கு. அவனுக்கு உடம்பைக் குடுக்கிறதைத் தவிர்த்து அந்தப் பெண்களுக்கு வாழ்க்கைல இலக்குங்கிறது ஒண்ணுமே கிடையாதாங்கிற எரிச்சல் வருது. அத்தோட ஒரு ஆணால தன்னோட சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் படுக்கைல சாய்ச்சுக்க முடியும்கிறது விரசமா இருக்கு. ‘இதெல்லாம் சாத்தியம்தானுங்கோ’ன்னு முன்னுரையிலயே கோடி காட்டியிருக்கிற வாமு.கோமுகிட்ட ஒரேயொரு கேள்வி கேட்கணும்னு தோணுது. எங்கயாச்சும் தான் காதலிக்கிற பொண்ணுமுன்னாடி, வயசுக்கு வந்த அவ தங்கையை எந்த ஒரு ஆணாவது கையில தூக்கிக்குவானா? அப்படியே தூக்கிக்கிட்டாலும் காதலி இருக்கும்போதே அவ தங்கைக்கிட்ட சில்மிஷம் பண்ணுவானா? அப்பிடிப் பண்ணின ஒரு ஆளை அந்தப் பொண்ணு சாந்தாமணி காதலிப்பாளா? (இப்டில்லாம் நடக்கும்ங்கிறாரு சிபிச்செல்வன்)

அப்புறம் தமிழில புதுசாப் படிக்கணும்னு வர்ற ஒருத்தன் அல்லது ஒருத்தி அவங்க காலக்கொடுமையினால இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாங்கன்னு வைச்சுக்கோங்க… இலக்கியம் பற்றி அவங்களுக்கு என்ன மரியாதை வரும்கிறீங்க…! இலக்கியத்துக்கு சமூகத்துல இப்பவும் ஒரு மரியாதை மயிருங் கெடயாதுன்னு செலபேர் சொல்லலாம். அதை உயிருன்னு நெனைச்சுட்டு வாழுற செலபேர் எல்லாக் காலத்துலயும் இருந்துக்கிட்டுத்தான இருக்காங்க.

பெண்ணெழுத்துப் பற்றி பரவலான சர்ச்சைகள் ஓடிட்டிருக்கிற இந்தக் காலகட்டத்துல ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ஐ ஒரு பெண் எழுதியிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். ரொம்ப காமெடியான (குரூரமானதும்) காட்சிகள் கண்முன்னாடி வந்துபோச்சு. தப்புப் பண்ணினவங்களை ஊருக்கு வெளியில ஒதுக்கிவைக்கிறதுமாதிரி சுடுகாட்டுக்குப் பக்கத்துல கொண்டுபோய்த் தள்ளிவைச்சிருப்பாங்கங்கிறதுல சந்தேகமேயில்லை. ‘முலைகள்’னு தன்னோட கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு வைச்சதுக்காக கவிஞர் குட்டி ரேவதியை இருட்டடிப்பு செய்த சமூகந்தான இது?

வாமு.கோமு எழுத்தைப் பத்தி நீங்க கருத்துரைக்க வேண்டியதில்லை… தவிர்த்துடுங்க… எதுக்கு தேவையில்லாம பிரச்சனையை வளர்த்துக்கிறீங்கன்னு என்னோட நண்பர்கள்ல ரெண்டு மூணு பேர் சொன்னாங்க. “விமர்சனங்கிறதை ஏத்துக்கிற பக்குவம் அவருக்கு இருக்கும்னுதான் நான் நினைக்கிறேன். அதை தனிப்பட்ட வன்மமா அவர் வளர்த்துக்கமாட்டார்”னு நான் பதில்சொன்னேன். தவிர, இது அவரோட புத்தகம் தொடர்பானதுதான… அவரைப் பற்றிக் கிடையாதுல்ல. ஆட்களைப் பற்றித்தான் அதாவது அவங்க தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித்தான் விமர்சனம் பண்ணக்கூடாது. அது தப்பு. அவர் படைப்பைப் பற்றி விமர்சனம் பண்ணலாம்ல. நான் இன்னும் கள்ளி, தவளைகள் குதிக்கும் வயிறு இதெல்லாம் படிக்கலை. கள்ளி நல்லா வந்திருக்கிறதா சொல்றாங்க. படிக்கணும்.”

இவ்ளோதான் நான் பேசுனது. ஒடன சிபிச்செல்வன்ட்ட இருந்து ஒரு ஆட்சேபக்குரல் கௌம்புது.

“இந்த சமூகத்துல இப்டியெல்லாமா நடக்கும்ங்கிற மாதிரி தமிழ்நதி பேசுனாங்க. ஏராளமா நடக்குது. தமிழ்நதிக்குத்தான் அதெல்லாந் தெரியலை”

நான் எவ்ளோ விசயம் சொல்லியிருக்கேன். இவர் இத எப்டி மாத்துறார் பாருங்கன்னு நான் உள்ளுக்குள்ள நெனைச்சுக்கிட்டேன்.

சந்திரா ஒடன சத்தம் போட ஆரம்பிச்சா.

“இதெல்லாம் ஆணாதிக்க எழுத்து… இதயெல்லாஞ் சகிச்சுக்க முடியாது”அப்டிங்கறா,

“ஒரு ஆளத் தேடித் தேடிப் போய்ப் படுத்துக்கிறதத் தவிர்த்து பொண்களுக்கு வேற வேலையே கெடயாதுங்கிறீங்களா…?”;-இது நான்.

“பெண்களை வெறும் தசைப் பிண்டமாப் பாக்கிற வேலை இதுன்னு உங்களுக்குத் தோணலையா”-இது சந்திரா.

சிபிச்செல்வன் ‘இல்லல்ல… அவர் அப்டியெல்லாம் நெனைச்சு எழுதியிருக்கமாட்டார்’அப்டீன்னு தொடர்ந்து பேசிட்டே இருந்தார். ‘அப்புறம் இதெல்லாஞ் சமூகத்துல உள்ளதுதா’ங்கிற தொனியை கடேசிவரைக்கும் விடலை. அதுவா பிரச்னை? போதாக்குறைக்கு வா.மு.கோமு பக்கத்துல இருந்த ஒரு நண்பர் ஏதோ சத்தம் போட ஆரம்பிச்சார். அவர் பேரு தெரிலை.

“இதெல்லாம் மூடி மூடி வைக்கணும்கிறீங்களே… இப்பல்லாம் பள்ளிக்கூடங்கள்லயே சொல்லிக் குடுக்கிறாங்க தெரியுமா?”ங்கிறாரு சிபிச்செல்வன்.

“எப்டி எப்டில்லாம் படுத்துக்கலாம்னா? இந்தப் புத்தகத்த ஒங்க கொழந்தைக்கு நீங்க வாசிக்கக் குடுப்பீங்களா?”ன்னு கேக்கிறா சந்திரா.

“நாங்க முலை, யோனின்னு ஒண்ணு ரெண்டு வார்த்தைகள கவிதைல வைச்சு எழுதினா கலாச்சாரத்தைக் கெடுக்கிறாங்க லபோதிபோன்னு வயித்துல அடிச்சுக்கிட்டு சத்தம் போடுறீங்களே… இந்தப் புத்தகம் கெட்டவார்த்தைக் களஞ்சியம் மாதிரி இருக்கே… இதுக்கு ஒண்ணுஞ் சொல்லமாட்டீங்களே”-நான்.

“இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிற யாரும் பெண்ணெழுத்துக்கு எதிரானவங்க கெடயாது”-சிபிச்செல்வன்.

“இதுல நாவலுக்குரிய எந்தக் கூறு இருக்கு?”

“இது இப்டித்தான் இருக்கணும்னு எதாவது உண்டா? எல்லாத்தையும் கலைச்சுப் போடறதுதான இலக்கியம்”

“அப்ப நாவல் விமர்சனக் கூட்டத்துல இந்தப் புத்தகம் எப்டி வந்துச்சு?”

சந்திரா நல்லா சண்டை போட்டா.அப்புறம் சிபிச்செல்வனும் ஜோஸ்ம் ஒருத்தரையொருத்தர் பாத்து எதோ பேசிக்கிட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் ‘சட்டகம், பின்னவீனத்துவம், கட்டுடைத்தல்’இந்த மாதிரி வார்த்தைகளப் போட்டு மெரட்டிட்டிருந்தாங்க. அப்பறம் அஜயன் ‘அமைதி… அமைதி…’ன்னு எந்திரிச்சாரு. ‘யாராவது கருத்துச் சொல்லணும்னா முன்னாடி வந்து பேசுங்க… இப்டி உங்களுக்குள்ளயே பேசிட்டிருந்தா எப்டி’ன்னாரு.

இளங்கோ கிருஷ்ணன் எழுந்து வந்தார். வழக்கமான நிதானமான பாவம்.

“போர்னோகிராபிக்கும் போர்னோ இலக்கியத்துக்கும் வித்யாசம் இருக்கு. இது போர்னோவா நின்னுடுச்சு. ஆர்ட் பார்மா மாறலை… இத வைச்சு கைமுஷ்டி அடிச்சுக்கலாம்.”அப்டின்னார் இளங்கோ.

பால்நிலவன் எழுந்து வந்தார்.

“தமிழ்நதி சொன்னதுல ஒரு விசயத்த மட்டும் எடுத்துக்கிட்டுப் பேசப்படாது. பெண் எழுத்து தொடர்பான சர்ச்சைல்லாம் ஓடிட்டிருக்கிற இந்தக் காலத்துல இதையே ஒரு பெண் எழுதியிருந்தா என்னவிதமான எதிர்வினை ஏற்பட்டிருக்கும்னு அவங்க கேட்டாங்க. அப்புறம் இதுல வர்ற பெண்கள் காமப்பண்டங்கள்ங்கிறதுக்கு மேல பேசப்படலையேன்னு கேட்டாங்க. பேச்சு திசைதிரும்பிடப்படாது”ன்னார்.

“சரி… இந்தப் புத்தகத்த எழுதி இப்டியெல்லாம் சர்ச்சையக் கிளப்பிவிட்ட வா.மு.கோமு என்ன சொல்றாருன்னு இப்ப கேட்டுக்கலாம்”னாரு அஜயன்.

“நாவல் எழுதினா நல்லா விக்கும்னு நண்பர்கள் சொன்னாங்க. அதுக்காக எழுதினதுதான் இது. எங் கள்ளி நாவல் தோத்துப்போயிடுச்சு. பெருசா விக்கலை. இதாவது காசு குடுக்கும்னு நெனைச்சு எழுதினேன். வேற பெரிய நோக்கங்கள் எல்லாம் கெடயாது. தஞ்சைப் பிரகாஷோட மீனின் சிறகுகள் புத்தகவத்தைப் பக்கத்துல வைச்சுக்கிட்டுத்தான் இத எழுதினேன். தமிழ்நதியோட கானல் வரிய மூணு நாளைக்கு முன்னால படிச்சேன். கடுப்பாயிடுச்சு. என்னோட கொளத்தங்கரை இதெல்லாங்கூட அச்சுக்குக் குடுத்திருக்கலாமேன்னு அப்போ தோணுச்சு.”ன்னு பதிலுக்கு வாரினாரு.

அட கொக்கமக்கா! நானும் சந்திராவும் கொழுத்துற வெயில்ல மிச்சமிருந்த தொண்டத் தண்ணி காயுறவரைக்கும் சத்தம் போட்டிருக்கோம். இவுரு சாவதானமா எந்திருச்சு வந்து ‘இப்டி எழுதுனா விக்கும்னாங்க… அதனால அப்டி எழுதினேன்’ங்கிறாரே… நம்மள இப்டிக் காலி பண்ணிட்டாரேன்னு நெனைச்சுக்கிட்டேன். ஒலகந் தெரிஞ்ச ஆளு. நம்மள மாதிரியா?

மொத அமர்வு கலகலப்பா இப்டி முடிஞ்சுபோச்சு. சாப்பிடக் கூப்டாங்க. எங்களுக்கெல்லாம் மரக்கறி (வெஜிடபில்னு சொல்வாங்கல்ல…. அது) சாதமும், தக்காளி சாதமும் பரிமாறினாங்க. நல்ல பசி. சாப்டிட்டு வந்து மரநிழல்ல ஒக்காந்துக்கிட்டோம். சாப்டும்போது ஹரிகிருஷ்ணன் பக்கத்துல இருந்தவங்களல்லாம் வாரிக்கிட்டே சாப்ட்டாரு.

ரெண்டாவது அமர்வைக் கலகலப்பாக்கினவங்கன்னு கண்டராதித்தனையும் கண்மணி குலசேகரனையுஞ் சொல்லலாம்.

தமிழ்மகனோட ‘வெட்டுப்புலி’புத்தகத்தப் பத்தி நம்ம பைத்தியக்காரன்(சிவராமன்) ஒரு கட்டுரை எழுதி அனுப்பியிருந்தார். அத தக்கை பாபு படிச்சார். கட்டுரை ஆரம்பமே அசத்தலா இருந்துச்சு. என்னய எது அசத்தும்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும்ல. அவரு சொல்றாரு… ‘அதிகாரங்களால் கழுத்து துண்டாடப்பட்ட புலி நமக்கு முன் இருக்கிறது. நான் இங்கே சொல்வது எந்தப் புலி என்பது உங்களுக்குப் புரியும்’இந்தப் பாணியிலயே கட்டுரை போய்ட்டிருந்துச்சு. அது ஒரு அழகான விமர்சன உத்தின்னு கூட்டத்துல இருந்தவங்க பேசிக்கிட்டாங்க. அதாவது, ஒரு புத்தகத்தை மையமா வைச்சு ஆரம்பிச்சு புத்தகத்துக்குள்ளயும் புத்தகத்துக்கு வெளில புறச்சூழல் பத்தியும் விமர்சனங்கள முன்வைக்கிறது. ரொம்ப சுவாரசியமான கேட்பனுபவமா அந்தக் கட்டுரை இருந்துச்சு. முடிஞ்சா அதோட ஒரு நகலை பைத்தியக்காரன்ட்ட கேட்டு வாங்கிக்கணும்.

அப்புறம் கண்மணி குணசேகரனோட ‘நெடுஞ்சாலை’நாவலைப் பத்தி முத்துவேல் கட்டுரை வாசிச்சார். ‘இயந்திரங்களோட வேலை பாக்கிற ஒரு மனுசனோட இதயம்’பத்தி அவர் பேசுனார்னு நெனைக்கிறேன். ஆழ்ந்து படிச்சு எழுதின நல்ல கட்டுரை. நம்ம ச.முத்துவேல்தான். விமர்சனத்த விடவும் சுவாரசியமா இருந்தது எதுன்னா கண்மணி குணசேகரனோட பேச்சுத்தான். அவர் பேசி முடியற வரைக்கும் கூட்டம் குலுங்கிக்கிட்டே இருந்துச்சு. அவ்ளோ சிரிப்பு.

“இதெல்லா எனக்குத் தெரியாதுங்க. யெங்கூர்ல காதலனும் காதலியும் முத்தம் குடுக்கிற காட்சி வந்தா பூவும் பூவும் ஒரசிக்கிற மாதிரி காட்டுவாங்கல்ல… அப்டித்தான். ரொம்ப சூதானமா இருப்பாங்க.”

அப்புறம் அவர்பாட்டுக்கு எலக்கியக் கூட்டங்களை வாருறாரு. மேட்டுக்குடிப் பொய்மைங்கள கலாய்க்கிறாரு. கடேசில சொல்றார் “என் புத்தகத்தை நம்பி வாங்கலாங்க. நான் ஒங்கள ஏமாத்தமாட்டேன்”அப்டிச் சொன்னதும் ஒருமாதிரி நெகிழ்ச்சியா இருந்துச்சு. மேலுக்கு அவர் பேசுனதெல்லாம் நகைச்சுவையா இருந்துச்சு. ஆனா அதுக்குப் பின்னாடி ஒரு சோகம் ஒட்டிக்கிட்டே இருந்தமாதிரி தோணுச்சு. ‘ஏலா மக்கா… எம்மாம் பொய் இந்த வுலகம்’ங்கிற எள்ளலைப் பாக்க முடிஞ்சுச்சு. அவர் புத்தகங்கள அவசியம் படிக்கணும்னு நான் நெனைக்கிறேன்.

இந்தக் கூட்டத்தோட முக்கியமான நிகழ்ச்சிக்கு நாம வந்தாச்சு. அதாவது, பா.வெங்கடேசனோட ‘தாண்டவராயன் கதை’விமர்சனம். பா.வெங்கடேசன் கூட்டத்துக்கு வர்லை. ஸ்ரீநேசன்தான் ‘தாண்டவராயன் கதை’பத்திப் பேசுனாரு. ஒரு மனுசன் ஒரு புத்தகத்துக்குள்ள போயி ஒக்காந்துக்கிறது எப்டின்னு அவர் பேசுறதக் கேட்டிட்டிருந்தப்போ தோணுச்சு. ஒங்களுக்கெல்லாம் புரியிற மாதிரி சொல்லணும்னா ‘புத்தகத்துக்குள்ள வசிக்கிறது’. ஸ்ரீநேசன் மொதல்ல அந்தக் கதையச் சொல்றாரு. ஐயோ சொல்லாதிங்களேன்னு நான் மனசுக்குள்ள கூவிக்கிறேன். ஏன்னா நான் நிக்கிறது 73ஆவது பக்கத்துல. இவரு சொல்லிட்டா மீதியப் படிக்கிறதுல இருக்கிற சுவாரசியம் போயிடும்ல.

ஸ்ரீநேசனுக்குள்ள இருக்கிற கவிஞன்தான் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்கணும். சாபக்காடு, எலினார், ட்ரிம்ஸ்டாம்… இப்டி எதோ சொந்தவூரு சொந்தக்காரங்களப் பத்திப் பேசுறமாதிரி பேசிட்டே இருக்காரு. ‘இதை வெங்கடேசன்தான் எழுதினாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு’அப்டீன்னு அவர் சொல்றப்போ கூட்டத்துல இருந்து ஒரு குரல். ‘எங்களுக்கும் அதே சந்தேகந்தான்’. நம்ம ஆளுங்களுக்கு இந்த நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லேன்னு வைச்சுக்கங்களேன்… காக்கா கொத்திட்டுப் போயிடும்.

“என் மண்டைக்குள்ள ஒரு குரல் கேட்கும்போது எழுத ஆரம்பிப்பேன். அந்தக் குரலோட வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுத முடியாமத் திணறியிருக்கேன்”அப்டீன்னு வெங்கடேசன் ஸ்ரீநேசன்ட்ட சொன்னாராம்.

“இந்த நாவல் இவர வைச்சுத் தன்னையே எழுதிக்கிட்டதுபோல எனக்குத் தோணுது. அவ்ளோ மிஸ்டிக் இதுல இருக்கு”அப்டீன்னு ஸ்ரீநேசன் சொன்னார். இன்னும் அவர் நெறயச் சொன்னார். அவர் ‘தாண்டவராயன் கதை’யப் படிக்கப் படிக்க மறந்துட்டே போச்சுன்னு சொன்னதுமாதிரி எனக்கும் மறந்துபோச்சு. ஆனா அந்தப் பேச்சைக் கேட்டுட்டு இருந்தப்போ ஒரு புதிர்த்தன்மை எல்லாத்துலயும் சாம்பலா படர்ந்திருந்ததுபோல தோணுச்சு. ஸ்ரீநேசன் அவ்ளோ பரவசத்தோட அந்த நாவலைப் பத்திப் பேசினார்.

செல நாவல்களோட பேர்களைக் குறிப்பிட்டுச் சொல்லி… இதுகளை எல்லாம் விடவும் இந்த நாவல் ரொம்ப நல்லா வந்திருக்கிறதா ஸ்ரீநேசன் சொல்லிட்டு வந்து ஒக்காந்துக்கிட்டாரு. கண்டராதித்தன் கொஞ்சம் வெளில போய்;ட்டு ரொம்ப நிதானமா உள்ள வந்திருந்தார். ஸ்ரீநேசன் குறிப்பிட்ட நாவல்கள்ள ஜெயமோகனோட விஷ்ணுபுரமும் இருந்திச்சில்லயா… அவர் விஷ்ணுபுரத்தப் கப்னு புடிச்சுக்கிட்டாரு.

“இன்னா சொன்ன… விஷ்ணுபுரமா… அப்போ விஷ்ணுபுரம் முக்கியமான நாவல்னு நீ ஏத்துக்கற இல்ல…?”இப்டி ஆரம்பிச்சு விஷ்ணுபுரம் விஷ்ணுபுரம்னு பேசிட்டே இருந்தாரு. அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் இந்த நாவல் தொடர்பா ஏதாவது பிரச்னை முன்னாடி இருந்துச்சா… இல்லைன்னா ஜெயமோகன் மேல கண்டராதித்தனுக்கும் காண்டா… அதான் இப்டிப் போட்டு அழுத்தறாரான்னு எனக்கு ஒண்ணும் புரியலை. நல்லவேளை பின்னவீனத்துவத்தை ஒரக்க மொழிகிற யாரும் அங்க இல்லை. இல்லைன்னா ‘பிரதி என்ன சொல்லுதுன்னா… சொல்லப்படாத சொல்லுள் இருக்கிறது கதை’ன்னு ஆரம்பிச்சு கடுப்பேத்தியிருப்பாங்க.

அப்புறம் தூரன் குணா எந்திருச்சு முன்னாடி வந்தார். அவரும் ‘தாண்டவராயன் கதை’யைப் படிச்சிருந்தார்.

“இந்த நாவல் தமிழ்ல முக்கியமான நாவல் அப்டிங்கிறத நான் ஒத்துக்கிறேன். ஆனா முதன்மையான நாவல்ங்கிறத ஒத்துக்கமுடியாது”அப்டீன்னார். ஆனா அவரும் தாண்டவராயன் கதையோட எழுத்து ஒவ்வொரு கட்டத்துலயும் மாறி மாறிப் போயிட்டிருந்ததை சொல்லத்தான் சொன்னார். அதுவொரு வித்தியாசமான அனுபவம்னார். அவர் நெறயப் படிக்கக்கூடிய ஆள்னு அவர் பேச்சுலேர்ந்து உணர்ந்துக்க முடிஞ்சுது.

அப்புறம் குலசேகரனும் அந்த நாவலோட புதிர்த்தன்மை பத்தி சிலாகிச்சுச் சொன்னார்.

என்ட்டக் கேட்டாங்க.

“எனக்கு வெங்கடேசனோட மழை வீட்டின் தனிமை அல்லது மழை வீடு அப்டீங்கற கதை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அப்புறம் யாரோ சொன்னாங்க… வெங்கடேசன் கதைக்குள்ள சில ஜோடனைகளைக் கொண்டுவராரு அப்டின்னு. அதனாலயோ என்னமோ அப்புறம் படிக்கலை. இப்போ இந்தக் கூட்டத்துக்காக தாண்டவராயன் கதையப் படிக்க ஆரம்பிச்சேன். மொழியோட இலாவகம் பிரமிக்க வைக்கிறதா இருக்கு. அப்புறம் அதோட புதிர்த்தன்மை நம்மைக் கூடக் கூடக் கூட்டிட்டுப் போய்ட்டே இருக்கு. நாவலை வைக்கவே முடியலை. நிச்சயமா இது தமிழ்ல ஒரு சிறந்த நாவலா பேசப்படும்”அப்டீன்னு சொன்னேன்.

கூட்டத்துல நெறயப்பேர் அதே கருத்தோட இருந்ததாத் தோணவும் அஜயன் பாலா ஒரு விஷயம் சொன்னார். அதாவது, தாண்டவராயன் கதைக்காகத் தனியா ஒரு கூட்டம் நடத்தணும்… அதுல ஒரு ஐந்தாறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டா அந்தக் கதையோட பன்முகத்தன்மை இன்னும் வெளிப்படுத்தப்படக்கூடிய சாத்தியப்பாடு அமையும் அப்டீன்னு சொன்னார். அத நாங்கல்லாம் ஆமோதிச்சோம். கூட்டத்துல இளங்கோ கிருஷ்ணன்… இன்னுங் கொஞ்சப்பேர சொல்லி அவங்கல்லாம் அதப் பண்ணலாம் அப்டீன்னு முடிவு செய்ஞ்சாங்க.

தடாகம்.காம் பத்தி ஒருத்தர் பேசினார். அவங்க எதிர்பார்த்தத விட ரொம்ப நல்லா அந்த இணையத்தளம் போய்ட்டிருக்கிறதா சொன்னார். அப்புறம் ஒரு அறிவித்தல். இதழ்கள்ள வந்திருக்கிற கவிதைகள்ளாம் சேத்து ஒரு தொகுதியாப் போடப்போறாங்களாம்னுட்டு. ஸ்ரீநேசனத் தொடர்புகொள்ளச் சொன்னாங்க.

இந்தக் கூட்டம் ரொம்ப நெறைவா நடந்துச்சு. இல்லேன்னா இப்டி ராத்தூக்கம் முழிச்சு பஸ்ஸேறி வந்ததுக்கு என்ன புரயோசனம்?

நான் கௌம்பறப்போ அஜயன் சொன்னார்.

“ஒரு நல்ல எழுத்தை நாம கட்டி இழுத்துக்கிட்டு வரணும்ங்கிற அவசியமில்லை. அதுக்குரிய எடத்தை அது தானாவே வந்து சேரும்ங்கிறத நீங்க இப்பவாவது நம்பறீங்களா?”

நம்பித்தானே ஆவணும். வேற வழி?

பிற்குறிப்பு: நான் எதுக்கு இந்த விமர்சனத்த இப்டியொரு லாங்வேஜ்ல (மொழின்னா புரியாதுல்ல) எழுதியிருக்கேன்னு நெனைப்பீங்க… ஒழுங்கா ஆடி ஆடி ‘போர்’அடிக்குதுங்க. கொஞ்சம் தப்பாட்டம் ஆடிப் பாக்கலாமேன்னுட்டுத்தான்.)

நன்றி : தமிழ்நதி

தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி‘ - பைத்தியக்காரன்




சேலத்தில் நடைபெற்ற சொற்கப்பல் “நாவல் விமர்சன அரங்கில்“ பைத்தியக்காரன் (என்.சிவராமன்) அவர்கள் விமர்சனக் கட்டுரை. தவிர்க்க இயலாத காரணத்தால் பைத்தியக்காரன் வர இயலாததால் தக்கை வெ.பாபு அதனை வாசித்தார்.

000

சேலத்தில் நடைபெற்ற வெட்டுப்புலி விமர்சனக்கூட்டத்தில் நண்பர் சிவராமன் எழுதி அளித்த விமர்சனம்.
அனைவருக்கும் வணக்கம்.

இப்படியொரு வாய்ப்பு அமைந்தது தற்செயல்தான் என்றாலும் மனம் முழுக்க நிரம்பி வழியும் துக்கத்தை எந்த சொற்களாலும் விளக்கிவிட முடியாது.

ஆமாம். வெட்டுப்புலி குறித்து பேச வந்திருக்கிறேன்.

வெட்டப்பட்ட புலியின் சரித்திரத்தை பேச வந்திருக்கிறேன்.

இன்னும் 10 நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத அழிவின் சோகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்தத் தருணத்தில்தான் வெட்டுப்புலி குறித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதிலும் தமிழனால் வெட்டப்பட்ட புலி அது என்பது அழுத்தம்திருத்தமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

தலைமுறை தலைமுறையாக வெட்டுப்பட்ட புலியின் சோகத்தை, தீரத்தை, சரித்திரத்தை, சறுக்கலை நாம் கடத்தித்தான் ஆக வேண்டும். ஒரு இனத்தை உயிர்ப்பிக்கும் விஷயமாக அதுவே இருக்கும்.

என்னடா இது... இவன் நாவலை குறித்து பேசாமல் வேறு எதையோ பேசுகிறானே... அதுவும் அரசியல் சார்ந்ததாக இருக்கிறதே... கூட்டத்தில் கலகம் உண்டாக்குவதுதான் இவன் நோக்கமா...

என்று நீங்கள் நினைக்கலாம்.

நினைக்க வேண்டும்.

காரணம், நான் பேசுவது வெட்டுப்புலி நாவல் குறித்து என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை -

ஆரம்பத்தில் நான் பேசியதை வைத்து உங்கள் மனதில் எழுந்த எண்ணங்களும், பிம்பங்களும்.

இது அரசியல் நாவல். ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு இயக்கத்தின் வரலாற்றை சொல்லியும், சொல்லாமலும் செல்லும் நாவல். சொல்லப்பட்டதை வைத்து சொல்லப்படாததை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நிரப்ப வேண்டும் என்பது இந்நாவல் உணர்த்தும் அழுத்தமான செய்தி. அதனால்தான் சாதாரண குடும்பங்களின் வழியே அசாதாரணமான 75 ஆண்டுக் கால சரித்திரம் எழுத்துக்களாக இடைவெளியுடன் கோர்க்கப்பட்டிருக்கிறது.

இறுதி அத்தியாயத்துக்கு முந்தைய அத்தியாயத்தின் இறுதி பத்தி வெட்டுப்பட்ட ஒரு முகத்தின் மீது திரும்பத் திரும்ப மீடியாக்களின் வழியே மக்களின் கவனம் குவிக்கப்பட்டதை சொல்கிறது. அது நம்பிக்கை அளித்த முகம். ஓர் இனத்தின் குறியீடு. சுதந்திரத்துக்கான விதையாக அந்த முகத்தை பலரும் பார்த்தார்கள். நேசித்தார்கள். வழிபட்டார்கள். அந்த முகம் ஒருபோதும் வெட்டப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், அந்நிகழ்வு நடந்துவிட்டது. அது கொடுத்த அதிர்ச்சி நடராஜனை அழ வைக்கிறது. பல ஆண்டுகளாக நினைவிழந்து பித்துப் பிடித்தது போல் காணப்பட்ட அவனுக்கு நினைவு திரும்பியது... தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்த வெட்டுப்பட்ட முகத்தை பார்த்தபோதுதான்.

இதனையடுத்து நாவலின் இறுதி அத்தியாயம், மு.க.அழகிரி மத்திய அமைச்சராவது குறித்து சொல்கிறது.

உண்மையில் நாவல் ஆரம்பமாவது இந்த இடத்திலிருந்துதான். இங்கிருந்து தொடங்கும் நாவலை எழுதும் பொறுப்பு வாசகர்களிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவல் வெற்றியடையும் பொறி இதுதானா?

வெட்டுப்புலி (Cheeta Fight) தீப்பெட்டியை நாம் பார்த்திருப்போம். சிறுத்தையை ஒரு மனிதன் நேருக்கு நேர் நின்று அரிவாளால் வெட்டும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி அது. எதற்காக அப்படியொரு படத்தை தீப்பெட்டியில் அச்சிட்டிருக்கிறார்கள் என்று நான் இதுவரை யோசித்ததில்லை. ஒரு கம்பீரத்துக்காக அப்படி வரைந்து பெட்டியில் பொறித்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது தமிழ்ச்செல்வனின் தாத்தாவின் பெரியப்பா - அதாவது கொள்ளுத் தாத்தாவின் - நிஜமான புகைப்படம் என்று அறிந்தபோது பிரபாஷ், ஃபெர்னாண்டஸ் போலவே எனக்கும் ஆச்சர்யமும், பதட்டமும் ஏற்பட்டது.

அதனாலேயே தமிழ்செல்வன் தன் கொள்ளுத்தாத்தாவின் வரலாற்றை தேடி பயணப்பட்டபோது அவனது மூன்றாவது நண்பனாக நானும் எனது வேலையை எல்லாம் விட்டுவிட்டு பயணம் செய்தேன். அதற்கு காரணம் இருக்கிறது.

சிறுத்தையை - கவனிக்க நான் மட்டுமல்ல தமிழ்ச்செல்வனும் புலி என்று குறிப்பிடவில்லை - கத்தியால் வெட்டிய சின்னா ரெட்டி உண்மையில் தமிழ்ச்செல்வனின் அப்பா வழி சொந்தமல்ல. அம்மா வழி சொந்தம்.

இந்த உண்மை தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, என்னையும் திடுக்கிட வைத்தது. மனதளவில் ஏற்பட்ட நெகிழ்வில் சட்டென்று தமிழ்ச்செல்வனின் தோள் மீது ஆதரவாக கைபோட்டேன். அவன் என் இனம். தாய்வழி சமூகத்தை தேடி புறப்படும் ஆதித் தமிழனின் வேர் என்னைப் போலவே அவனிடமும் இருக்கிறது.

நாங்கள் கை கோர்த்தபடி சின்னா ரெட்டியின் வரலாற்றை அறிய புறப்பட்டோம். எங்கள் கண்முன்னால் விரிந்தது இரு குடும்பங்களின் கதை. அந்தக் கதையினுள் நான் நுழைய நுழைய எனக்குள் உணர்ச்சிப்பூர்வமான மாறுதல்கள்.

ஓவென்று அலறி தமிழ்ச்செல்வனை கட்டிப் பிடித்து நான் கதறியதை பிரபாஷும், ஃபெர்னாண்டஸும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். தமிழ்ச்செல்வனாலேயே என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை புரிந்துக் கொள்ள முடியாதபோது மற்ற இருவரால் எப்படி உணர முடியும்?

உண்மையில் நாங்கள் அறிந்தது தமிழ்ச்செல்வனின் தாய்வழி கொள்ளுத் தாத்தாவின் வரலாற்றை அல்ல. எனது கொள்ளுத் தாத்தா, தாத்தா, மாமா, பெரியப்பா, பெரியம்மா... என சகலரின் சரித்திரமும் அதில் அடங்கியிருக்கிறது. ஆமாம், இது என் குடும்பத்தின் கதை...

இப்படி இக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவருமே உணர முடியும் என்பதுதான் இந்நாவலின் பலம்.

தமிழக அரசியலோடு நம் ஒவ்வொருவரின் குடும்பமும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சின்னா ரெட்டி, லட்சுமண ரெட்டி, தசரத ரெட்டி, நடராசன், தியாகராசன், ஹேமலதா, விசாலாட்சி, நாகம்மை... என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.

இந்நாவல் சொல்லப்பட்ட முறையிலும் சரி, சொன்ன களனிலும் சரி... புதிதாக இருக்கிறது. சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் திருவல்லிக்கேணி, தங்கச்சாலை, மயிலாப்பூர் மிஞ்சிப் போனால் பட்டாளம், ஓட்டேரி என குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றியபோது -

இந்நாவல் செங்குன்றத்துக்கு அடுத்துள்ள சோழவரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. சென்னையின் குடிநீர் விநியோகத்துக்காக வெள்ளையனிடம் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்ததோடு, பிழைப்புக்காக தன் நிலத்தை தானே வெட்டும் குடிமக்களின் சோகத்தை இந்நாவல் கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் இந்திய விடுதலைக்கு ஆதரவான காங்கிரசும் அதனை இன மற்றும் மொழி ரீதியாக விமர்சித்த நீதிக்கட்சியும் செல்வாக்கு பெற்றிருந்தன. நீதிக்கட்சி பின்னர் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கமாகியது. இந்த நெடிய வரலாறு... இந்நாவலில் உயிர் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபத்திரத்துடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

பெரியார், அண்ணா, கலைஞர் மட்டுமல்ல... எம்.ஜி.ஆர்., ரஜினியும் இந்நாவலில் வருகிறார்கள். 'எண்டர் தி டிராகன்' ஏற்படுத்திய அதிர்வை கனவுகள் உதிரும் கட்டமாக நாவல் மாற்றியிருக்கிறது.

பாலச்சந்தரை குறித்து தியாகராசன் பொருமும் இடம் அழுத்தமானது என்றால் -

கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை அளித்த பாஸ்கரனை 'வண்ணத்திரை' அலுவலகத்தில் ரவி சந்தித்து பேசும் இடம் ஆழமானது.

'நாடார் குரல் மித்ரன்' நாளிதழில் வெளிவந்த பெரியார் குறித்த செய்தியை லட்சுமண ரெட்டி அறியும் கட்டமும், அ.ச.ஞானசம்பந்தத்தை விமர்சிக்கும் தியாகராசனின் செயலும், பெரியார்தாசனுடன் தேநீர் பருகும் நடராசனின் உள்ளக் கொந்தளிப்பும் -

எதை உணர்த்துகிறது? அதை ஒவ்வொரு வாசகனும் கண்டறியும்போது -

எழுதப்பட்ட பிரதிகளுக்கு அப்பால் அலைந்தபடி இருக்கும் வரலாற்றை சட்டென பிடிக்க முடியும்.

திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆறுமுக முதலி, டூரிங் டாக்கீஸ் கட்டியதுடன் நின்றுவிடுகிறார். ஆனால், அவரது மகன் சிவகுரு படம் தயாரிக்கிறான். அந்தப்படம் பாதியுடன் நின்றுவிடுகிறது. இறுதியில் கோயில் வாசலில் பிச்சைக்காரனாக சிவகுரு இறந்து போகிறான்.

வனஜா என்னும் நடிகையின் மீது சிவகுரு கொள்ளும் மையல், பின்னால் நடிகை செண்பகாவை ரவி முதன்முதலாக பேட்டி காண்பதுடன் தொடர்புடையது. செண்பகாவின் தாய் பெயர் வனஜா என்று போகிற போக்கில் பதிவான வாக்கியம் தமிழ்ச்செல்வன், பிரபாஷ், ஃபெர்னாண்டஸை மட்டுமல்ல நம்மையும் யோசிக்க வைக்கிறது. எழுதப்படாத வனஜாவின் கதையை - அவளது கனவை - வாசகன் இங்கு எழுத ஆரம்பித்தால் அவனுக்கு இன்னொரு நாவல் கிடைக்கும்.

இந்நாவலில் சில காதல் கதைகள் நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. லட்சுமண ரெட்டி தாழ்த்தப்பட்ட பெண்ணான குணவதி மீது கொள்ளும் காதல், முதலாவதாக வருகிறது. இந்தக் காதலால் ஒரு சமூகமே எப்படி கருகிப் போகிறது என்பது உணர்ச்சியுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வாசகனான என்னை மிகவும் பாதித்த காதல் தியாகராசன் - ஹேமலதா வாழ்க்கைதான். கடவுள் மறுப்பாளனாக வளரும் தியாகராசனுக்கு அமைந்த மனைவி தீவிர கடவுள் பக்தை. இந்த முரண்பாடுகள் அவர்களது வாழ்க்கையை எப்படியெல்லாம் கலைத்துப் போடுகிறது என்பது ரத்தமும் சதையுமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மணிகண்டனுக்கு பிறந்த குழந்தையை தன் குழந்தையாக தியாகராசன் பாவிப்பதும், மருத்துவமனையில் தன் குழந்தையின் பெயராக தன் மாமியாரின் பெயரான புனிதாவின் பெயரை ஹேமலதா உச்சரிப்பதும் தனியாக எழுதப்பட வேண்டிய ஒரு நாவலின் ஹைக்கூ.

பிராமணப் பெண்ணாக இருப்பதாலேயே கிருஷ்ணப் ப்ரியாவின் காதலை ஏற்க மறுக்கும் நடராசன், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தேவகியை மணக்கிறான். ராஜீவ்காந்தியின் மரணத்தை தொடர்ந்து அவனுக்கு சித்தபிரமை பிடிக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் சுயநினைவின்றி வாழ்கிறான். அப்போதும் தேவகி அவனுடனேயே வாழ்கிறாள். ஆண்டுக்கு ஒருமுறையாவது நட்பின் அடிப்படையில் கிருஷ்ணப் ப்ரியா அவனை பார்த்துவிட்டு செல்கிறாள்.

இந்தப் பகுதியை சற்றே வேறுவிதமாக வாசித்துப் பார்ப்போம். ஒருவேளை கிருஷ்ணப் ப்ரியாவை நடராசன் திருமணம் செய்துக் கொண்டிருந்தால் -

அவனுக்கு சித்த பிரமை பிடித்த நிலையிலும் அவனுடன் கிருஷ்ணப் ப்ரியா வாழ்ந்திருப்பாளா?

இந்தக் கேள்விக்கான விடையில் மறைந்திருக்கிறது 21ம் நூற்றாண்டின் கதை!

வயதான காலத்தில் மருத்துவமனையில் படுத்திருக்கும் லட்சுமண ரெட்டி முணுமுணுப்பது குணவதியின் பெயரைத்தானே? முதல் காதல் இறுதிவரை தொடரவே செய்யும் என்பது எவ்வளவு அனுபவப்பூர்வமான உண்மை?

திராவிட கழக அனுதாபியான லட்சுமணரெட்டி, தன் குடும்பத்தை சாதி மறுப்பு குடும்பமாக மாற்ற முடியாமல் தவிக்கிறார். தன் மகளுக்கு வேறு சாதியில் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பமே அனுமதி தர மறுக்கிறது. அப்போது அவருக்குள் நிகழும் போராட்டம், ஒரு தலைமுறையின் மனப்போராட்டம். அபசகுனம் பிடிச்ச பெண் என உறவினர்கள் குற்றம்சாட்டும் பெண்ணை விடாப்பிடியாக திருமணம் செய்து கொள்வதன் மூலமாக தனது கொள்கையை ஓரளவு காப்பாற்றிக் கொள்கிறார். அவரால் அந்தச் சூழலில் முடிந்தது அவ்வளவுதான்.

திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர்கள் ஒரு கட்டத்தில் அன்னை, சாய்பாபா என்று மாறுவதை வாழ்க்கையின் போக்கிலேயே நாவல் உணர்த்துகிறது.

குறிப்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி... என ஆண்கள் உயிருள்ள தலைவர்களுக்கு பின்னால் அணி திரள்வதற்கு மாற்றாக -

வாழும் தெய்வங்கள் என சமூகத்தால் மதிக்கப்படும் மனிதர்களுக்கு பின்னால் அவர்களது குடும்பங்கள் அணி திரள்கிறது. இது அந்த குடும்ப ஆணை எதிர்க்க வேண்டும் என்பதற்காக செய்யும் செயல். அதனாலேயே அவன் யாரை மதிக்கிறானோ -

யாரது கோட்பாடுகளை பின்பற்ற துடிக்கிறானோ -

அதற்கு எதிரான பக்கத்துக்கு மூர்க்கத்துடன் செல்கிறார்கள்.

இந்த முரணுக்கு காரணம் எது?

அரசியல் தலைவர்களா?

இயக்கமா?

அல்லது சமூகமா?

வருங்கால தலைமுறை ஆராய வேண்டிய இந்த நிகழ்கால அவலத்தை பதிவு செய்திருக்கும் நாவலின் பகுதி, முக்கியமான விவாதத்தை முன் வைக்கிறது.

பத்து பத்து ஆண்டுகள் கொண்ட பாகமாக இந்நாவல் அச்சிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாகத்திலும் அந்தந்த காலத்தில் நடந்த அனைத்து அரசியல் நிகழ்வுகளும் பதிவாகியிருப்பதாக சொல்ல முடியாது. ஆசிரியரின் தேர்வு சார்ந்த விஷயங்களே நாவல் களத்தில் வருகின்றன. அதில் தவறும் இல்லை.

ஆனால், தேர்வு செய்யப்படாத அரசியல் நிகழ்வுகள் இருக்கிறதே... அது முக்கியம்.

அவை ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான காரணமே, நமது இப்போதைய பிற்போக்குத்தனத்துக்கு காரணம்.

இதைதான் அழுத்தம் திருத்தமாக இந்நாவல் உணர்த்துகிறது.

இந்நாவலை எழுதிய தமிழ்மகனின் நண்பனாக -

சில வருடங்கள் அவருடன் ஒன்றாக பணிபுரிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

என் குடும்ப வரலாறாக சொல்லப்பட்ட நிகழ்வுகளின் வழியே அறியப்படாத உறவுகளின் சரித்திரத்தை நான் கண்டடைய உதவியதற்கு நன்றி நண்பா...

வாருங்கள்...

புலிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டதற்காக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலைப்படும் இந்த நேரத்தில் -

வெட்டுப்புலியின் சரித்திரத்தை தெரிந்து கொள்வோம்...

வெட்டுப்புலி என்று இப்போது நான் குறிப்பிட்டது நாவலை மட்டுமல்ல....

-------

இன்று சேலத்தில் நடக்கும் 'சொற்கப்பல்' நாவல் விமர்சன அரங்கில் வாசிக்கப்பட உள்ள கட்டுரை இது. தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் சேலம் செல்ல முடியவில்லை. ஆனால், கட்டுரையை அனுப்பிவிட்டேன். என் சார்பில் கட்டுரையை வாசிக்கும் நண்பருக்கும், வாய்ப்பளித்த 'சொற்கப்பல்' அமைப்பாளர்களுக்கும் நன்றி. 8-5-2010.


நன்றி : பைத்தியக்காரன்

நன்றி : தமிழ்மகன்

சேலத்தில் நடைபெற்ற சொற்கப்பல் நாவல் விமர்சன அரங்கு - சிறு வரைவு - அஜயன்பாலா

சொற்கப்பல் மூன்றாவது நிகழ்வான நாவல் விமர்சன அரங்கு. தக்கை இலக்கிய அமைப்புடன் இணைந்து சேலம் சிவகாமி அம்மையார் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் திறந்தவெளி நிகழ்வாக கடந்த 08 மே சனிக்கிழ்மையன்று திட்டமிடப்பிட்டபடி நடந்தேறியது. பங்கேற்பாளர்களிடம் தீவிரமானதொரு அகபதிவுகளுடன் சஞ்சலங்களையும் மிகுந்த மன எழுச்சியையும் உண்டாக்கியபடி நடந்தேறிய இந்நிகழ்வுக்கு .. தமிழின் குறிப்பிடத்தக இளம் படைப்பாளிகள் ஐம்பதுக்கும்மேற்படோர் பங்கேற்று சிறப்பித்தனர்.வா.மு.கோமு, கண்மணிகுணசேகரன், க.மோகனரங்கன், சிபிச்செல்வன், அசதா, அய்யப்ப மாதவன் ஸ்ரீநேசன், கண்டராதித்தன், பால்நிலவன் ,மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன், தமிழ்நதி, சந்திரா,ஷாராஜ் ,இசை, இளங்கோகிருஷ்ணன், சாகிப்கிரான், குலசேகரன், நீலகண்டன் ,பாக்கியம் சங்கர், ச.முத்துவேல், விஷ்ணுபுரம் சரவணன், அகச்சேரன், ராஜா, ,சக்தி அருளானந்தம், கீதாஞ்சலி ப்ரியதர்ஷிணி, சேலம் திவ்யா மற்றும் சென்னை விழுப்புரம் , வேலூர், ஆம்பூர்,தர்மபுரி,ஓசூர், பெரம்பலூர், மேட்டுபாளையம் கோவை,திருப்பூர்,பெங்களூரு என பல்வேறு இடங்களிலிருந்து வருகைதந்திருந்த எண்ணற்ற இளம் படைப்பாளிகள் பங்கேற்ற இந்நிகழ்வுக்கு சுப்ரபாரதி மணியன் தலைமை தாங்கினார்.த்க்கை பாபு மற்றும் அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.

சேலத்தின் மின்வெட்டு காரணமாக பள்ளிக்கூட வகுப்பறையில் நடக்கவேண்டிய நிகழ்வு எதிர்பாராமல் மரத்தடிக்கு மாற பிற்பாடு அதுவே நிகழ்ச்சியின் மற்றொருசிறப்பாகவும் மாறியது..

தக்கை பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். அஜயன்பாலா சொற்கப்பல்குறித்து அறிமுகம் நிகழ்த்தி பின் தொடர்ந்து நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் பணியும் மேற்கொண்டார்.

ஈசன் இளங்கோ வாழ்த்துரைக்கு பின் சுப்ரபாரதிமணியன் சமகால நாவல்களின் போக்கு குறித்து ஒருகட்டுரை வாசிக்க அதன்பின் பின் விமர்சன அரங்கு துவங்கியது.

கட்டுரையாளர் மற்றும் விமர்சகர் ஆகியோரை அவர்களுக்கு நன்குஅறிமுகமான பார்வையாளர்கள் கூட்டத்தில் அறிமுகம் நிகழ்த்தினர். கண்டராதித்தன் அறிமுகத்துக்குபின் அசதா கட்டுரையுடன்வந்தார்.

கரிகாலனின் நிலாவை வரைபவன் நாவல் குறித்து முழுமைபெறாத நவீனமுயற்சி என்றவகையில் தன் சாரம்சத்தை கட்டுரையில் அசதா வெளிப்படுத்தினார்.

இரண்டாவதாக கவிஞர் இசையின் அறிமுகத்துக்கு பிறகு இளங்கோகிருட்டிணன் கீரணூர் ஜாகீர்ராஜாவின் துருக்கி தொப்பி நாவல்குறித்த கட்டுரையுடன் வந்தார். நாவல்குறித்தான தன் வரலாற்று பார்வையை முதலில் விரிவாக கூறிபின் நாவல் குறித்த தன்செறிவான் கட்டுரையை வாசித்தார். ஆசிரியரது முந்தைய இருநாவல்களை காட்டிலும் இது பலவகைகளில் சிறப்பானதாக இருந்தாலும் நாவல்முழுக்க வாசகனுக்கான அமைதிக்கு எங்கும் இடமில்லாமல் இருக்கிறது என்றார். ஷாராஜ் இதர இஸ்லாமியநாவல்களில் இந்த நாவலின் இடம் என்ன என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை என்பதை குறையாக குறிப்பிட இளங்கோ கிருட்டிணனுக்கு முதலில் அவர் கேள்வி புரியவில்லை.பின் தோப்பில்முக்கம்மது மீரான் மற்றும் சல்மாவின் நாவல்களோடு ஒப்பிடும்போது இதனை எப்படி குறிப்பிடுகிறீர்கள் என கேட்க இளங்கோ அத்ற்கு இது அவற்றைவிட இது சிறந்த நாவல் என்றே குறிப்பிட்டார்.

தொடர்ந்து காலை அமர்வின் இறுதிகட்டுரையாளராக வாமு.கோமுவின் சாந்தாமணியும் இன்ன பிற காதல்கதைகளும் நாவல்குறித்தான கட்டுரையுடன் வந்தார் சாகிப்கிரான் அத்ற்கு முன்னதாக சாகிப்கிரானை தக்கை பாபு அறிமுகம் செய்ய வா.மு.கோமுவை மண்ல்வீடு ஹரி அறிமுகபடுத்தினார். எடுத்த எடுப்பிலேயே தன் வாத்தியார் என கொமுவை குறிப்பிட்ட ஹரிமுடிக்கும் போது அவர் இப்போது எழுதுவதை இன்னொருமுறை படித்துவிட்டு அச்சுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக்கூறி தன் வழக்கமான குத்த்லோடு முடித்தார்.

மொத்த ஆறு நாவல்களில் வா.மு. கோமுவின் சாந்தாமணியும் இன்னபிற கதைகளும் நாவலுக்கு கடும் எதிர்வினை நிகழ்ந்தது. சாகிப்கிரான் இந்தவிமர்சனகட்டுரை வாசித்து முடிப்பதற்குமுன் , கவிஞர் தமிழ்நதி எழுந்து இந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க உடன் எழுத்தாள்ர் சந்திராவும் சேர்ந்துகொண்டார். இருவருமே இந்தநாவலில் அளவுக்கதிகமாக பாலியல்சித்தரிப்புகள் இருப்பது குறித்தும் பெண்களை இழிவுபடுத்துவதாக எழுதப்பட்டுள்ளது என்றும் ஆவேசத்துடன் பேசினர். அதற்கு பதில் சொல்லும் விதமாக எழுந்த செந்தில் கோமு உலகில் நடக்காத ஒன்றை எழுதவில்லை எனக்கூற பதிலுக்கு தமிழ் நதி நாவலில் இடம்பெற்ற ஒருகாட்சியை கூறி இப்படியெல்லாம் நடக்கிறதா என கேட்க உடனே சிபிச்செல்வன் எழுந்து ஆமாம் நடக்கிறது தமிழ் நாட்டின் எல்லாகிராமங்களில்லும் சர்வ சாதாரணமாக நடக்கிறது எனக்கூற தொடர்ந்து தமிழ் நதிக்கு ஆதரவாக பலரும் பேச துவங்கினர் . கவிஞர் ஷாராஜ் கோமுவுக்கு ஆதரவாக களத்தில் குதித்தார். ஜொஸ் அண்ட்ராயினுக்கும் சிபிச்செல்வனுக்கும் வாமுகோமுவின் நாவலுடைய பின் நவீனத்துவதகுதிகள் குறித்து நேரடி வாக்குவாதம் துவங்கியது. இறுதியாக பேசவந்த வாமு.கோமு ஆமாம நான் என் புத்தக விற்பனைக்காகத்தான் அப்படி எழுதினேன் என அதிரடியாக கூறி ப்ரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

மதிய அமர்வில் கண்மணிகுணசேகரனின் நாவலை ச.முத்துவேல் விமர்சனம் செய்யவந்தார். நாவலில் போதுமான அழுத்தம் இல்லை என்பதாக கூற த்ன்னுரையாக பேச வந்த கண்மணி தன் இயல்பான கிராமத்து பேச்சால் சூழலை கலகலப்பாக மாற்றினார்.

முத்துவேல் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி விமரசனம் செய்திருக்கலாம் என ஆற்றாமையை வெளிப்படுத்திய கண்மணி

தன் நாவல்களை நம்பி படிக்க்லாம் அது ஒரு போதும் உங்களை ஏமாற்றாது என கூறி முடித்தார்.

தமிழ் மகன் எழுதிய வெட்டுபுலி நாவல்குறித்த தன் விமர்சனத்தை சிவராமன்(பைத்தியக்காரன்) கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்தார். கட்டுரையாளர் நாவலாசிரியர் இருவருமே தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தக்கை வே,.பாபு அக்கட்டுரையை வாசித்தார்.

.பாவெங்கடேசன் குறித்து ஓசூரிலிருந்து வந்த சிவக்குமார் அரிமுகம் செய்ய கவிஞர் ஸ்ரீ நேசனை அஜயன் பாலா அறிமுகப்படுத்தினார் . நேசன் வாசித்த பா.வெங்கடேசனின் தாண்டவராயண் கதை பலவிவாதங்களை பெரும் புயலாக கிளப்பிவிட்டது. எடுத்த எடுப்பிலே இதுவரை வந்த தமிழ் நாவல்களில் மிக மிக சிறந்த நாவல இதுதான் என திட்டவட்டமாக கூறிவிட்டு பேசதுவங்கினார். நாவல் கதையின் போக்கு குறித்து அவர் பேசியவிதம் அனைவரையும் இறுக்கமாக ஒருமந்திரத்தில் கட்டிப்போட்டது. தாண்டவராயன் கதை மோகமுள் ,விஷ்ணுபுரம் பொன்ற நாவல்களையெல்லாம் பின்னுக்குதள்ளிவிட்டது என்றும் கூறினார். நாவலைபடித்த போது அவருக்கு ஏற்பட்ட மலைப்பு அவர்பேசியதை அங்கு கேட்ட அனைவருக்கும் தொற்றியதென்னவோ உண்மை.

நேச்னை தொடர்ந்து கருத்துதெரிவிக்க வந்த தூரன் குணா மிகசிறந்த நாவல் என சொல்லமுடியாது எனகூறியதோடு அல்லாமல் இந்நாவல் இதர உலகநாவல்களான நேம் ஆபத் ரோசஸ் மற்றும் மை நேம் இஸ் ரெட் ஆகிய நாவல்களின் தாக்கம் இதில் அதிகமாக இருந்தது என்றும் மறுத்துபேசினார் அதேச்மயம் தாண்டவராயன் கதை தமிழில் குறிப்பிடத்தகுந்த நாவல் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் கூறி முடித்தார்.

தொடர்ந்து இந்நாவல் குறித்த தன் வாசிப்பனுபத்தை கீதாஞ்சலி ப்ரியதர்ஷினி கட்டுரை ஒன்றை வாசித்தார்.இத்னை தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்த எழுத்தாள்ர் பால் நிலவன் கவிஞர் குலசேகரன் ஆகியோரும் நேசன் கூற்றுக்கு ஆதரவான கருத்துக்களை கூறினர். இத்னைத்தொடர்ந்து தேர்ந்த ஐந்து விமர்சகர்களுடன் தாண்டவராயன் கதை குறித்து தனியாக ஒரு விமர்சன அமர்வை நிகழ்த்த சொற்கப்பல் முடிவுசெய்திருப்பாக நிகழ்ச்சியை தொகுத்துவழங்கிய அஜயன்பாலா அங்கேயே தெரிவித்தார், நிகழ்ச்சியின் துவக்க கட்டுரையாக திட்டமிடப்பட்ட தாண்டவராயன் கதை இறுதி கட்டுரையாக மாறிப்போனது கூட ஆச்சர்யமான நிகழ்வு..

. …? -.
அஜயன்பாலா

சொற்கப்பல் அமர்வு : 3 - நாவல் விமர்சன அரங்கு

நவீன இலக்கிய சூழலில் பதிப்பக மைய அரசியலின் பிடிகளை தளர்த்தவும் , புதிய ஊற்றுகண்களை வளப்படுத்தவும், அடைப்புகளை சீர் செய்யவும், வாழ்வாங்குவாழ நவீன தமிழை முன்னெடுத்துசெல்வதற்குமாக ஆரம்பிக்கப்பட்ட சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பு கடந்த கூட்டங்களை சென்னையில் சிறப்பாக நடத்தியிருக்கிறது.


கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றின் மீதான விமர்சனக் கூட்டங்களை, விவாத அரங்குடன், கவிஞர் விக்ரமாதித்யன், கூத்துப்பட்டறை முத்துசாமி போன்ற மூத்த படைப்பாளிகளின் முன்னிலையில் சொற்கப்பல் நடத்தியுள்ளது.


சொற்கப்பல் விமர்சன தளத்தின் அடுத்த நிகழ்வாக அண்மைய நாவல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கும் நிகழ்ச்சியில் தங்களையும் அன்புடன் அழைக்கிறேன்.


சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து நடத்தும்
நாவல் விமர்சன அரங்கு

நாள் : 8.5.2010 சனிக்கிழமை காலை 9.30 - 5.00 மணி
இடம் : சிவகாமி அம்மையார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாப்பேட்டை, சேலம்.
------------------------------------------------------------------------------

காலை 9.30 மணி

வரவேற்புரை :
‘தக்கை‘ வெ.பாபு

துவக்கவுரை :
ஈசன் இளங்கோ

தலைமையுரை :
சுப்ரபாரதிமணியன்

------------------------------------------------------------------------------------------

காலை 10 - 1 மணி

நாவல் விமர்சன அரங்கு

அமர்வு : 1

கருத்துரையாளர்கள் : தமிழ்நதி, சந்திரா

நாவல் & ஆசிரியர்............................................................. விமர்சனம்

1. தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்................................. ஸ்ரீநேசன்
....
2. நிலாவை வரைபவன் - கரிகாலன் .............................................. அசதா

3. சாந்தாமணியும் இன்ன பிற காதல்களும் - வாமுகோமு ....... சாகிப்கிரான்

பகல் 2 - 5

அமர்வு : 2

கருத்துரையாளர்கள் : தாராகணேசன், மோகனரங்கன்

4. துருக்கி தொப்பி - கீரனூர் ஜாகிர் ராஜா ................................ இளங்கோ கிருஷ்ணன்

5. வெட்டுப்புலி - தமிழ்மகன் ....................................................... பைத்தியக்காரன் (சிவராமன்)

6. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் ............................... ச.முத்துவேல்

------------------------------------------------------------------------------------------

நன்றியுரை :
அமுதரசன் (தடாகம்.காம்)

பங்கேற்பாளர்கள் :
அஜயன்பாலா சித்தார்த், கண்டராதித்தன், அய்யப்ப மாதவன், பால்நிலவன், காலபைரவன், யாத்ரா மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
தக்கை வெ.பாபு

தொடர்புக்கு :
பொன்.வாசுதேவன் - 999 454 1010 / தக்கை வெ.பாபு - 96009 53007

அனைவரும் வருக !

சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்

அகநாழிகை - தமிழ்மகன் - தடாகம்.காம் - டிஸ்கவரி புக் பேலஸ்

அய்யனாரின் ‘தனிமையின் இசை‘ விமர்சனம் - நிலாரசிகன்



சொற்கப்பல் இரண்டாம் அமர்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை

அய்யனாரின் தனிமையின் இசை கவிதை தொகுப்பின் மீதான என் பார்வையை,அனுபவத்தை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

அய்யனாரின் கவிதைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக இணையத்தில் படித்ததுண்டு. வம்சி வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் அக்கவிதைகளை மொத்தமாக படிக்கும்போது ஏற்படும் நிறைவு இணையக்த்தில் படிக்கும் போது கிடைத்தாக ஞாபகமில்லை.

நெகிழ்வு,அலைவு,பிறழ்வு,மய்யம் என்ற நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவரது கவிதைகள் பல்வேறு உணர்வுகளை வாசகனுக்குள் தெளித்துச்செல்கின்றன.

அய்யனாரின் கவிதைகளின் பலமாக கவிதைமொழியை சொல்ல முடியும்.மொழி இவருக்கு கூப்பிடும் தூரத்தில் இருப்பதாகவே ஒவ்வொரு கவிதைவரிகளும் பறைசாற்றுகின்றன. அதனால்தான் எதைப்பற்றியும் அல்லது பற்றாமலும் கவிதைகளை தந்திருக்க முடிகிறது இவரால்.

நெகிழ்வு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் அழகியலை முன்வைக்கும்போதும் செறிவான சொற்களும் அடர்த்தியான வரிகளும் கவிதைகளுக்கு வலு சேர்க்கின்றன. கவிதைக்குள் நுழையும் முன்னரே அதன் தலைப்புகள் வாசகனின் மனதோடு நெருக்கமாகிவிடுகின்றன. உதாரணமாக மழையின் ஈரக்கைகள்,ஆற்றின் உட்பரப்பு,உட்குளம்,மழைக்கால கிளர்வுகள் போன்ற தலைப்புகளை மேற்கோள் காட்டமுடியும்.
ஆற்றின் உட்பரப்பு கவிதையை முதலில் மெளனமாக வாசித்துப் பார்த்தேன். பின் சத்தமிட்டு வாசித்துப்பார்த்தேன். மெளனத்திற்கும் சப்தத்திற்கும் இடையே வெவ்வேறு அனுபவமாக விரிந்தது இக்கவிதை. ஒரு ஆற்றை பற்றி விவரித்துக்கொண்டே செல்கிறார் கவிஞர். ஆற்றில் குளிக்க வந்த நடுவயதுக்காரி நீரின் குளுமையில் சிலிர்த்து தவற விடும் ரவிக்கை,ஆற்றில் மிதந்து சென்ற பிணம்,தன் பிம்பத்தை உற்றுநோக்கும் செம்மறி ஆட்டுக்குட்டி இப்படியாக நீள்கின்ற வரிகள் கடைசியில் “காட்சிகளை விழுங்கியபடி சலனமற்று விழித்திருக்கும் ஆற்றின் உட்பரப்பு” என்று முடிக்கிறார் கவிஞர். இந்த கடைசி வரியை சலனமற்று விழித்திருக்கும் நம் ஆழ்மனதின் தனிமையாக உருவகப்படுத்துக்கொள்ள முடிகிறது.

அலைவு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் புலம்பெயர்ந்த வலியை,ஏக்கத்தை,நிறைவேறா கனவுகளை,பிரிவுத்துயரை,தனிமையை பாடுபொருளாக கொண்டவை. எதுவுமற்று இருத்தல் என்றொரு கவிதை இதிலுண்டு. அக்கவிதையின் சாயலையே பிற கவிதைகளிலும் வெவ்வேறு ரூபத்தில் காண முடிகிறது. தனிமையின் குரூரத்தையும் அதன் மூலம் பிறக்கும் ஞானத்தையும் பல கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் அய்யனார்.

பிறழ்வு தலைப்பின் கீழ் மொத்தம் இருபது கவிதைகள் இருக்கின்றன. இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை பிறழ்ந்த மனநிலையை அல்லது சூழலை வெகு கனமான சொற்களால் விவரிப்பவை. இதில் ஆகச்சிறந்த கவிதையாக குற்றவுணர்விலிருந்து விடுபடல் கவிதையை சொல்லலாம். “ஒரு பெண்ணை முத்தமிடுமுன் சற்று யோசியுங்கள் பின்னெப்போதாவது அவை மீளவே முடியாத பின்னிரவுக் குற்றவுணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகி விடலாம்” என்று தொடங்குகின்ற கவிதை தவறொன்றை செய்துவிட்டு பின் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதை பற்றி அற்புதமாக விவரித்துச் செல்கிறது. இக்கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது
“குற்றவுணர்வுகளற்ற இருப்பு மெதுவாய் நகரும் மேகங்களுக்குள்ளும் வேப்பமரக் கிளைகளிடையேயும் எவருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டுள்ளது”

மய்யம் தலைப்பின் கீழுள்ள கவிதைகளில் பல மிகை எதார்த்த வகைமையை சார்த்தவை. இத்தொகுப்பில் என்னை அதிகம் ஈர்க்காத பகுதி எனில் அது இந்த மய்யம் பகுதிதான். கப்பல்காரி,உடலைப் புசித்தல் போன்ற கவிதைகள் தொகுப்பின் கனத்தை குறைக்கக்கூடிய கவிதைகள். அவற்றை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் அய்யனாரின் கவிதையுலகம் காதல்,கட்டுப்பாடற்ற காமம்,பெண்கள்,கலாச்சாரத்தை உடைத்தெறிதல்,போலிகளின் முகத்தில் எச்சில் உமிழ்தல்,மாய எதார்த்த உலகின் வசீகர கனவுகள்,எள்ளல்,சுயவிசாரணை என்று விரிந்திருக்கிறது. உரைநடை தன்மையிலான ஒன்றிரண்டு கவிதைகளை கழித்துவிட்டு பார்த்தால் “தனிமையின் இசை” நவீன கவிதை உலகில் முக்கியமான புதுவரவு. ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும்,வாழ்வனுபவமும், மொழிமீதான தீராத வேட்கையுமே அய்யனாரின் பலம். இனி வரும் தொகுப்புகளில் அய்யனார் தனக்கான தனிமொழியை அடைந்துவிடுவார் என்பதை உறுதியாக சொல்லலாம்.

சொற்கப்பல் விமர்சன தளத்தில் வாய்ப்பளித்த பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் நட்பும்,நன்றியும்.

-நிலாரசிகன்.

பின்குறிப்பு: சொற்கப்பல் விமர்சன கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.நண்பர் ச.முத்துவேல் இக்கட்டுரையை வாசித்தார்.அவருக்கும் நன்றி.

சொற்கப்பல் விமர்சன தள கூட்டம் அமர்வு இரண்டு - கற்றதும் பெற்றதும்



நாம் யாராவது கடிதங்களை போடும்,வாசிக்கும் வழக்கம் வழக்கு ஒழிந்து போகும் நிலைக்கு நாம் தள்ளபட்டு கொண்டு இருக்கிறோம்.

சொற்கப்பல் விமர்சன தளம் ஆரம்பிக்கபட்டு அதன் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி இந்த நேரத்தில் இதை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கும்

பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
அஜயன்பாலா
முகுந்த் (தடாகம்.காம்)
வேடியப்பன்(டிஸ்கவரி புக் ஹவுஸ்)
ஆகிய அனைவருக்கும் என்றும் நன்றி தெறிவிக்க கடைமைபட்டுள்ளோம். நிகழ்ச்யில் திரை பாடல் ஆசிரியர் நா.முத்துகுமார் காஞ்சிபுரம் வெ.நாராயணன் பறிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
கூத்துபட்டரை நா.முத்துசாமி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நாற்பது வருடங்களுக்கு மேலான அனுபவத்தை ஓன்றரை மணிநேரத்தில் முடித்து கொண்டார் இருந்தும் அவர்

கூத்தபட்டரை பயிற்ச்சி அனுபவங்களை வெளிநாட்டு நாடக அனுபவங்கள் நேரமின்மை காரணமாக அவர் பேச முடியவில்லை மேலும் புத்தக விமர்சனங்கள் (திறனாய்வுகள்) நரன் தவிர மற்ற அனைவரும் கட்டுரையாக வாசித்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது
அவணபடுத்த கட்டுரையாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் போது உரைநடையில் பகிர்ந்து கொண்டால் கேட்பவருக்கு அண்ணியபடாமல் இருக்கும்.
மேலும் டிஸ்கவரி புக் ஹவுஸ் புத்தக கடையில் வெளிகாற்று உள்ளே வர வழி இல்லாததால் பேசியவர்,கேட்பவர்களுக்கு அசொகரியமாக இருந்து சிலர் வாசலின் அருகில் இருந்து பேச்சை கேட்டார்கள் சிலர் புத்தகங்களை சுற்றி பார்த்து கொண்டு கேட்டார்கள் சிலர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பக்கத்தில் இருக்கும் புத்தகங்களை கையில் வைத்து கொண்டு கேட்டார்கள்.
இதையெல்லாம் தவிர்க்க வலைபதிவர் சந்திப்பு நடக்கும் இரண்டாவது தளத்தில் இதை நடத்தினால்
இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்

நன்றி : கற்றதும் பெற்றதும்

சொற்கப்பல் இரண்டாம் அமர்வு

நேற்று (சனிக்கிழமை) டிஸ்கவரி புக் பேலஸில் "சொற்கப்பல்" அமைப்பின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. கூட்டம் ஐந்து மணிக்கு ஆரம்பம் எ‌ன்று பதிவில் அறிவித்திருந்தார்கள். ஆறு மணிக்கு மேல்தான் நாற்காலிகள் வ‌ந்தன. அமர்வதற்கு இருக்கைகள் இல்லாமல் முகுந்த்(தடாகம்.காம்) , அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்) புத்தகங்களை மேய்ந்துக் கொண்டிருந்திருந்தார்கள்.


கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் ‌சில பல புத்தகங்களை வாங்கி பில் போட்டுக்கொண்டிருந்தார். நைஸாக எட்டிப்பார்த்ததில் அவரது கையில் கேபிள் சங்கர், சுஜாதாவின் திரைக்கதை பயிற்சி, கேபிள் சங்கர் புத்தகங்கள் இருந்தன. சந்திரா, சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர், தண்டோரா, கேபிள் சங்கர் எல்லாரும் வரும்போது ஆறு பத்து. ஆறரை வாக்கில்தான் கூட்டமே தொடங்கியது. முகுந்த் வரவேற்புரை நிகழ்த்தினா‌‌‌ர். நா. முத்துக்குமார் முதலில் பேச ஆரம்பித்தார். கோணங்கி புத்தகம் கிடைக்காமல் சைக்கிளில் பக்கத்து ஊர் போய் வாங்கி வந்த நிலைமை இப்போது இ‌ல்லை.எல்லாமே அருகிலேயே கிடைக்கின்றன. புதிதாக எழுத வருபவர்கள் நிறைய படிக்க வேண்டும். ரத்தினசுருக்கமாக பேசிவிட்டு இடத்தை காலி செய்தார்.



அடுத்து ஆரம்பித்ததுதான் கோடையிடி. ந.முத்துசாமி அவர்கள் பேச ஆரம்பித்தார். தலைப்பு 'என் கதைகள் - நாடகம் - வாழ்க்கை''. நான்கு புத்தகங்களுக்கு விமர்சனக்கூட்டம் எ‌ன்று சொல்லியவர்கள் ஏதாவது ஒரு தலைப்பில் ந.முத்துசாமி அவர்களை பேச அழைத்திருக்கலாம். ந.முத்துசாமி அவர்களுக்கு வயது‌ எழுபத்து மூன்று. கதைகள் - நாடகம் - வாழ்க்கை. பேச ஒரு நாள் போதுமா? ஏற்கனவே வேடியப்பன் புத்தகக்கடை வெந்து தணிந்த காடு போல புழுக்கமாக இருந்தது. முடியல. எழுந்துப்போய் ஒரு தம் டீ போட்டு வ‌ந்து திரும்பினா‌‌‌ல் ந.முத்துசாமி இன்னமும் பேசிக்கொண்டிருந்தார். சின்ன வயது அனுபவங்கள், நண்பர்கள், சென்னைக்கு வந்தது, செல்லப்பாவை சந்தித்தது, நடை சிற்றிதழை தொடங்கியது, கூத்துப்பட்டறை முயற்சி.....ந. முத்துசாமி நிறைய பேசினார். இரண்டாவது முறையாக தம் டீ போட்டு முத்துவேலுடன் திரும்பி வ‌ந்து பார்த்தால் சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர்,தண்டோரா மிஸ்ஸிங்.


இன்னைக்கு சிவராத்திரிதான் வீட்டுக்கு போய்விடலாம் எ‌ன்று கிளம்பும்போது நல்லவேளை கவிஞர் கண்டராதித்தன் அடுத்து பேச ஆரம்பித்தார். ஆனா‌‌‌ல் வருடம் பெயர்களை துல்லியமாக குறிப்பிட்டிருக்கலாம். மணி, செல்லப்பா, சிவராம் என்றால் சி.மணி, பிரமிள்,சி.சு செல்லப்பா எ‌ன்று குறிப்பிட்டிருந்தால் பு‌திய வாசகர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்குமெ‌ன்று குறிப்பிட்டார். கவிஞர் நீலகண்டனின் "முயல் போல் வாழும் காமம்" தொகுப்பில் தொகுப்பில் நிறைய படிமச்சுமை உள்ளதாக குறிப்பிட்டார். கவிஞர் வெயிலின் புவன இசை தொகுப்பை பற்றி கவிஞர் அய்யப்ப மாதவன் பேசினா‌‌‌ர். அய்யனார் விஸ்வநாத் "தனிமையின் இசை" பற்றி நிலாரசிகன் விமர்சனக்கட்டுரை அனுப்பி வைத்திருந்தார். அந்தக்கட்டுரையை கவிஞர் ச.முத்துவேல் வாசித்தார். அய்யனார் விஸ்வநாத்தூம் கூட்டத்துக்கு வரவில்லை. கவிஞர் உமாஷக்தியின் "வேட்கையின் நிறம்" பற்றி நரன் சற்றுநேரம் பேச ஆரம்பித்தார். "வேட்கையின் நிறம்" எ‌ன்ற தலைப்பு இருந்தாலும் உடல்மொழி அர‌சிய‌ல் பற்றி எந்த கவிதையும் குறிப்பிடாததும்,பல கவிதைகள் ஒரேமாதிரி இருப்பதும் இத்தொகுப்புக்கு மைனஸ் எ‌ன்று சொன்னார்.


வேடியப்பன் நன்றி சொல்லும்போது மணி எட்டரை. ந.முத்துசாமி அவர்கள் பேச்சு சற்று நீ....ண்டுவிட்டதால் அடுத்து வந்தவர்கள் அனைவரும் ‌மிக சுருக்கமாக பேச்சை முடித்துக்கொண்டார்கள். இந்த முறை டிஸ்கவரி புக் பேலஸில் புது தலைப்புகளில் ‌மேலும் சில புத்தகங்களை பார்க்கவும்,வாங்கவும் முடிந்தது.

நன்றி :
- என்.விநாயகமுருகன்

சொற்கப்பல் இரண்டாவது கூட்டம் ஒரு பார்வை - கூடூ

சொற்கப்பல் இலக்கிய அமைப்பின் இரண்டாவது கூட்டம் சென்னை - டிஸ்கவரி புக் பேலஸில் 03.04.2010 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, பாடலாசிரியர் நா. முத்துகுமார் கலந்து கொண்டனர். நான்கு கவிதை நூல்களுக்கு விமர்சனங்களும் பதிவு செய்யப்பட்டன.





சொற்கப்பலின் அமைப்பாளர் அஜயன்பாலா அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் அவர் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் நிறைய நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன. அதற்கு நேர்மையான விமர்சனங்கள் கிடைப்பதில்லை. ஒவ்வொரு சிறு பத்திரிகையும் தனக்கென பதிப்பகம் நடத்துவதினால் அவர்கள் பதிப்பிக்கும் நூலுக்கு அவர்களே விமர்சனம் எழுதி கொள்கின்றனர். எந்த குழுவையும் சாராத பல நல்ல படைப்பாளிகள் புறக்கணிக்கப் படுகின்றனர். அவர்களை இனம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் சொற்கப்பல். இதன் பின்னணியில் தடாகம்.காம், அகநாழிகை, டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ்மகன் ஆகியவை உள்ளன. ஒரு காலத்தில் வாசகனும் படைப்பாளியும் பல மணி நேரம் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கும் சூழல் இருந்தது. ஆனால் இன்று கணினி மனிதர்களை தனித்தனி தீவுகளாக மாற்றிவிட்டது.

சொற்கப்பல் இலக்கிய விமர்சன கூட்டத்திற்கு அழைப்பிதழ் அடிக்கால் பேஸ்புக், இமெயில், எஸ்எம்எஸ் மூலமாகவே அனைவருக்கும் விடுக்கப்பட்டது.

இலக்கியம் படைக்காமலேயே இலக்கிய மேம்பாட்டிற்காக பாடுபட்ட பலரை அடையாளப்படுத்தவும் சொற்கப்பல் விரும்புகிறது. அந்த வகையில் இந்த மாதம் காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் நாராயணன் பற்றி பேச பாடலாசிரியர் நா.முத்துகுமார் வந்துள்ளார்.

தமிழின் மூத்த படைப்பாளி கூத்துப்பட்டறை ந. முத்துசாமி இலக்கியம் சார்ந்த தம் வாழ்பனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளார்.

மூன்றாவது நிகழ்வாக கவிதை விமர்சனங்கள் நடைபெறும் கவிஞர் வெய்யிலின் கவிதை நூலுக்கு கவிஞர் அய்யப்ப மாதவனும் கவிஞர் நீலகண்டனின் கவிதை நூலை கவிஞர் கண்டராதித்தனும் கவிஞர் அய்யனாரின் கவிதை நூலை கவிஞர் நிலாரசிகனும் கவிஞர் உமாசக்யின் கவிதை நூலை கவிஞர் நரேனும் விமர்சனம் செய்வார்கள்'' எனக்கூறி அஜயன் பாலா வரவேற்பு உரையை நிறைவு செய்தார்.

நா. முத்துக்குமார்

காஞ்சிபுரத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வட்டம் அமைப்பை நடத்திக் கொண்டிருந்த நாராயணன் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் காலமானார். அவர் தஞ்சாவூர்க்காரர். வேலை நிமித்தமாக காஞ்சிபுரம் வந்தவர். காஞ்சிபுரத்திலுள்ள புற்றுநோய் மருத்துவமனையில் வேலை பார்த்தவர்.

தமிழகத்தில் புதிய கருத்துக்களோடும், புதிய இசங்களோடும் வெளிவரும் நூல்களை உடனுக்கு உடன் காஞ்சிபுரத்திற்கு அறிமுகப்படுத்துவார். நூல்கள் மட்டுமல்லாது படைப்பாளிகளையும் அழைத்து வந்து கூட்டம் நடத்துவார். காலை 10 மணி தொடங்கி மாலை வரை கூட கூட்டம் நீடிக்கும். தமிழில் எழுதுகின்ற பெரும்பால படைப்பாளிகளை காஞ்சிக்கு அழைத்து வந்துள்ளார். பல துறை சார்ந்தவர்களையும் அழைத்து வருவார். ஒரு முறை ஆன்மிகவாதி மற்றொருமுறை கடவுள் எதிர்ப்பாளர் வேறொருமுறை சோதிடவியலார் என பல வகையான ஆளுமைகளையும் கூட்டத்திற்கு அழைத்து வருவார்.

அந்த இலக்கிய கூட்டங்களால் பயன்படைத்தவர்கள் பலர். நானும், அஜயன்பாலாவும், வாசுதேவனும் அங்கிருந்து வந்தவர்கள்தான் பலருடைய படைப்பு முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்தார். காஞ்சிக்கு எல்லா சிற்றிதழ்களையும் வரவழைத்து அனைவருக்கும் வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இலக்கிய வட்ட கூட்டத்தில் நிகழ்ந்த அனைத்தையும் அன்றே எழுதி வைத்து விடுவார். அவற்றை ஒரு நூலாக கொண்டு வந்தால் அதுவே நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையாக, நன்றியாக இருக்கும். தொடர்ந்து வாசிப்பது மூலமே நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். காஞ்சி இலக்கிய வட்ட நாராயணன் அவர்களை நினைவு கூர வாய்ப்பளித்த சொற்கப்பலுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ந. முத்துசாமி

வாழ்க்கைப்பற்றி பேசவேண்டுமானால் 74 வருடங்களை நினைவு கூறவேண்டும். பிறகு நாடகம், கதைப் பற்றியும் பேச வேண்டும். எதிலும் சோதனை செய்து பார்க்கும் சூழலே எனக்கு அமைந்தது. என்னுடைய ஏழாவது வயதில் என் தகப்பனாரை இழந்தேன். அவர் தீவிரமான விவசாயி. நான் படித்தது வடுகர் தெருவில். அங்கு நாயுடுகள் அதிகம். அதனால் திராவிட கொள்கை அதிகம் பேசப்பட்டது. எனக்கும் இளம் வயதிலேயே திராவிட கொள்கை மீது பற்று ஏற்பட்டுவிட்டது. திராவிட கொள்கை பார்ப்பானியத்தை எதிர்ப்பது. ஆனால் நான் பிறந்துள்ளதோ பிராமண குலம். என் பாட்டி, எனக்கும், தம்பிக்கும் மாமாவுக்கும் ஒரே சமயத்தில் பூணூல் அணிந்து கொள்ள சொன்னபோது மறுத்துவிட்டேன். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் சிக்கல்களையும், முரண்பாடுகளையும் எதிர்கொண்டு போராடுவதே வாழ்க்கையாக இருக்கிறது எனக்கு.

முதலில் மறுத்தாலும் பிறகு பெரியவர்களின் வற்புறுத்தலால் பூணூல் போட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கான மந்திரங்களை கற்றுக்கொள்ளவில்லை. பிறகு பூணூலை கழட்டிவிட்டேன். அப்பாவின் திவசத்தின்போது மட்டும் பூணூல் அணிந்து கொள்வேன்.


என் திருமண வாழ்வும் அப்படித்தான். நான் இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னவுடன் என் அம்மாவுக்கு என்னைப் பற்றிய கற்பனைகள் உடைந்துவிட்டது.

சென்னைக்கு வந்து 25 வருடங்களாகி விட்டது. நான் வாழும் பகுதிகளில் எனக்கு உறவு உண்டாகவில்லை. கூத்துப்பட்டறை இலக்கியம் சார்ந்த உறவுகள் மட்டும்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு என் விருப்பு வெறுப்புகளைப் பற்றி யோசித்து பார்த்தேன் எனக்கு யார் மேலேயும் வெறுப்பில்லை என்றே தோன்றியது. ஆனால் யாத்ரா கட்டுரையில் புஞ்சையில் நான் வெறுத்த மனிதர்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். இதில் எது உண்மை, இரண்டு நாட்களுக்கு முன்பு யோசித்ததா? இருபது வருடங்களுக்கு முன்பு எழுதியதா?

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பல்வேறு வகைப்பட்ட நண்பர்கள் இருந்தனர் எனக்கு. நெடுமாறன் என் நண்பர்தான். கி. வீரமணியை தெரியும். அவரை எதிர்த்தேன். ஏனெனில் அவர் தி.க. நான் தி.மு.க.

அண்ணாவின் தலைமையில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரம்பினேன். அது முடியவில்லை. 1958ல் எனக்கு திருமணம் நடைபெற்றது. அன்று அதற்கான மொத்த செலவு ரூ.400 மட்டுமே.

சென்னையில் மீனவர்கள் வாழும் பகுதிகளிலேயே நான் விரும்பி வாழ்ந்தேன். பிராமணர்கள் வாழும் பகுதிகளில் வாழ எனக்கு விருப்பமில்லை.

திருமணத்திற்கு பிறகு என் மனைவிக்கு தீராத தலைவலி. பல மருத்துவர்களை பார்த்தும் சரியாகவில்லை. கடைசியாக உளவியல் மருத்துவரிடம் சென்றோம். அவர் முழுமையாக எங்கள் வாழ்க்கையை விசாரித்து தெரிந்து கொண்ட பிறகு குடும்ப வாழ்க்கைக்காக சில விசயங்களை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனால் பிறகு தொடர்ந்து பூணூல் போட்டதினால் தான் தலைவலி நின்றது என்பதை நான் நம்பவில்லை.

என் பையன்களுக்கும் பல மனப்போராட்டத்திற்கு பிறகே பூணூல் அணிவித்தேன். என் பெரிய மகன் பூணூலை கழட்டிவிட்டான். என் சின்ன பையன் பூணூலை கழற்றவில்லை. என் பெரிய பையனின் திருமணம் சாஸ்திர சம்பிரதாயம் இல்லாமல் நடந்தது. என் சின்ன பையனின் திருமணம் சாஸ்திரப்படி நடந்தது.

பூணூல் அணிவது, கழற்றுவது சம்மந்தமாக எனக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏராளம். ஆனால் என் மாமா பூணூலை விருப்பப்பட்டு அணியவுமில்லை. கழற்றும்போது எந்த பிரச்சினையும் இல்லை. வெளிநாடு சென்றார். வெளிநாட்டுக்காரியை மணந்து கொண்டார். அவருக்கு எதுவும் பிரச்சினை இல்லை. ஆனால், எனக்கு யூதர்களுக்கு ஏற்பட்ட மனசங்கடங்கள் போல் என்னுள் சங்கடங்கள் இருந்து கொண்டே இருந்தன.

நான் முதலில் விவசாயி. பிறகு பட்டமணியம் வேலை, தொழிற்சாலையில் வேலை என பல துறைகளிலும் வேலை பார்த்துள்ளேன்.

எழுத்து இரண்டாவது இதழ்வெளிவரும் சமயத்தில் எனக்கு சி.சு.செல்லப்பாவுடன் நட்புறவு ஏற்பட்டது. எழுத்துவில் வெளிவந்த புதுக்கவிதைகள் தமிழ் எழுத்து நடையையே மாற்றிவிட்டது. மொழியில் ஒரு பெரிய மாற்றத்தையே உண்டுபண்ணியது.

பத்திரிகைக்கு யாரும் எழுதாவிட்டாலும் பத்திரிகை முழுக்க நானே எழுதுவேன் என்ற மனோதிடம் இருந்தால் தான் சிற்றிதழ் பத்திரிகை ஆசிரியனாக இருக்க முடியும் என நம்பி பலர் செயல்பட்ட காலமது. சி.சு. செல்லப்பாவைப் பற்றி எனக்குள் விமர்சனமும் உண்டு.

கவிஞர் சி. மணி மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து ''நடை'' என்ற பத்திரிகையை துவங்கினோம். மொத்த தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பார்வையை செலுத்துவது என தீர்மானித்தோம். நான் சென்னை வந்த பிறகு, பல நாட்டிய நிகழ்ச்சிகளை காணச் செல்வேன். பரதம், கதகளி, பாலே, அமெரிக்க நடனம், ஐரோப்பிய நடனம் என வாய்ப்பு கிடைத்த அனைத்தையும் பார்த்தேன்.

கிராமத்து மனிதனாக என்னுள் இருந்த காட்சி மொழி, நடனத்தில் பார்த்த உடல் மொழி இவற்றை வைத்துக் கொண்டு நடைக்காக, ''காலம் காலமாக'' என்ற நாடகத்தை எழுதினேன். பிறகு ஒரு அயல்நாட்டு நாடக ப்பிரதி வாசித்தபோது எதையும் நாடகமாக எழுதலாம் என்ற சுதந்திர உணர்வு ஏற்பட்டது. பிறகுதான் ''அப்பாவும் பிள்ளையும், ''சுவரொட்டிகள்'' போன்ற நாடகங்களை எழுதினேன்.

தேசிய நாடகப்பள்ளி இயக்கம், நடிப்பு சொல்லிக்கொடுத்தது. அதில் பயிற்சி பெற்ற கோபாலியின் மிஸ். ஜுலி. நாடகம் பார்த்தேன். இந்தியன் தியேட்டர்ஸ் பற்றி வாசிக்க தொடங்கியிருந்தேன். இந்நிலையில், புரிசை நடேசத் தம்புரானின் கர்ணமோட்சம் பார்த்தேன். அப்போது என்னுள் கூத்துதான் தமிழ்நாடக வடிவம் தோன்றியது. பிறகு கூத்துப்பற்றி ஆராயத் தொடங்கினேன்.

இந்தியன் தியேட்டர்ஸ்-ல் இருந்த அனைத்தும் தெருக்கூத்தில் இருப்பவையே. தெருக்கூத்திற்கும் நாட்டிய சாஸ்திரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. பிறகு தான், பரந்தாமன் நடத்திய அஃக் பத்திரிகையில் கூத்தைப்பற்றி எழுதினேன்.

கொல்லன் பட்டறையில் இரும்பு சாமான் தயாரிப்பதுபோல், தச்சுப்பட்டறையில் மரச்சாமான்கள் தயாரிப்பதுபோல், நடிகர்களை உருவாக்குவதற்காக கூத்துப்பட்டறை தொடங்கினேன். கூத்துக்கென ஒரு நடிகனைமட்டும் உருவாக்காமல் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கவேண்டும்.

நவம்பர் புரட்சியின்போது ரஷ்யாவை விட்டு வெளியேறிய ஒரு கலைஞன் உருவாக்கிய நான்காவது வழி என்ற செயல் முறையை கடைபிடிக்க தொடங்கினோம். புத்திசம், இஸ்லாம், இந்துயிசம் ஆகிய மூன்றிலிருந்து நல்ல அம்சங்களை எடுத்து உருவாக்கியதுதான் நான்காவது வழி என்பதாகும்.

சங்கீத நாடக அகாதெமியில் வேர்களை தேடிச் சென்று பழைய கலை வடிவங்களை மீட்க வேண்டும் என செயல்பட்ட காலத்தில் அதே பணியை செய்து வந்த கூத்துப்பட்டறைக்கு நிதி ஆதாரங்கள் கிடைத்தன.

கணவன் மனைவி இருவரும் சமமானவர்கள். நாங்கள் சண்டையிட்டுக் கொள்வோம். உள்ளுக்குள் அன்பை பொதிந்து வைத்துக்கொண்டே சண்டையும் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான். என் மனைவி வேலைக்கு சென்றுவிடுவார். நான் பகல் முழுவதும் ஒரு சிறுகதையை தன்மையிலும், பன்மையிலும் மாற்றி மாற்றி எழுதி சிறுகதையின் வடிவத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பேன். மாலையில் மனைவியின் வருகைக்காக காத்திருப்பேன். பல வடிவங்களில் எழுதி பயிற்சி செய்வதன் மூலம்தான் படைப்பாளி தனக்கென வடிவத்தை கண்டடையமுடியும் என நம்புகிறேன். மறுபடியும் மறுபடியும் எழுதுவதினால் படைப்புத்திறன் குறைந்துவிடாது என்றே கருதுகிறேன்.

சொற்கப்பல் இலக்கிய விமர்சன கூட்டத்தின் மூன்றாவது நிகழ்வாக கவிதை நூல்கள் பற்றிய விமர்சனம் வாசிக்கப்பட்டது.

கவிஞர் வெய்யிலின் 'புவன இசை' கவிதை நூல் குறித்து கவிஞர் அய்யப்ப மாதவன் விமர்சன கட்டுரை வாசித்தார்.

அய்யப்பமாதவன்

தமிழில் நிறைய கவிதை நூல்கள் வருகின்றன. விமர்சனம் செய்ய யாருமில்லை. ஒரு காலத்தில் க.நா.சு., சு.ரா.விமர்சனம் செய்தார்கள். அவர்கள் இப்போது இல்லை. இந்திரனும், தி.க.சி.யும் இருக்கிறார்கள். ஆனால் இப்போ அவர்கள் விமர்சனம் எழுதுவதில்லை.

எது ஒரு கவிதை என சொல்ல தெரிந்தவனுக்கு விமர்சனம் ஒரு பொருட்டல்ல. கவிஞர் வெய்யில் தம் கவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் படிமங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். ஒன்றை ரசித்து முடிப்பதற்குள் மற்றொன்று என வரிசையாக இருக்கிறது. இச்சிறு புத்தகத்தில் எத்தனை எத்தனை அனுபவங்கள். இவருடைய கவிதைகளில் மிடுக்கு இருக்கும் அளவுக்கு புரிதல்கள் இல்லையோ என எனக்குள் தோன்றுகிறது. கவிதை என்பது தங்கம் மாதிரி புடம் போட போடத் தான் சிறப்பாக வரும்.

கவிஞர் நீலகண்டனின் ''முயல்போல் வாழும் காமம்'' கவிதை நூலை கவிஞர் கண்டராதித்தன் விமர்சனம் செய்து கட்டுரை வாசித்தார்.

கண்டராதித்தன்

நீலகண்டனின் கவிதை நூலில் பல கவிதைகள் சிறப்பாக தொடங்கி மிகவும் சாதாரணமாக முடிந்துவிடுகிறது. ஒரு கவிஞன் 10,20 நல்ல கவிதைகள் எழுதினாலேயே மொழிக்கு உபகாரம் செய்தவனாகிறான். எளிமையான சொல்லாடல்கள் மூலம்தான் சிறந்த கவிதைகளை சென்றடைய முடியும் எனக் கருதுகிறேன். இக்கவிதை நூலில் கதை சொல்லல் முறையில் சொல்லப்பட்டுள்ள கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன.

கவிஞர் அய்யனாரின் ''தனிமையின் இசை'' கவிதை நூலுக்கு கவிஞர் நிலாரசிகன் எழுதிய விமர்சன கட்டுரையை அவருடைய நண்பர் முத்துவேல் வாசித்தார். நிலாரசிகன் கூட்டத்திற்கு வரவில்லை.

அய்யனாரின் கவிதை நூலில் பல கவிதைகளின் தலைப்பே வாசகனோடு ஒரு நெருக்கத்தை தருவதாக நிலாரசிகன் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் உமாசக்தியின் ''வேட்கை நிறம்'' கவிதை நூலை கவிஞர் நரேன் விமர்சனம் செய்தார்.

உமா சக்தியின் கவிதை நூலில் அவன், அவள், அவர்கள் மற்றவை என பிரிவுகளில் கவிதைகள் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று வித்தியாசம் இருப்பதாக உணரவில்லை. குறிப்பாக மற்றவை பகுதியில் உள்ள கவிதைகள் பக்கம் நிரம்பியாகவே உள்ளது என கவிஞர் நரேன் குறிப்பிட்டார்.

பிறகு கவிஞர் உமாசக்தியின் மொழி புதிய வகையை சேர்ந்தது என கூறும் நரேன், இக்கவிதை நூலின் அட்டையை கிழித்து விட்டால் இது உமாசக்தியின் கவிதைகள் என்பதற்கான அடையாளம் ஏதுமில்லை என்றும் கூறுகிறார். எல்லா கவிதைகளிலும் ஒரு உணர்ச்சியே திரும்ப திரும்ப வருவதாக கூறும் நரேன், தன்னுடைய விமர்சனத்தை ஒரு கட்டுரையாக எழுதி வாசித்திருந்தால் அவர் ஒரே விசயத்தை மறுபடியும் மறுபடியும் கூறிக்கொண்டிருப்பதை உணர்ந் திருக்கக் கூடும்.

இறுதியாக அஜயன் பாலா அனைவருக்கும் நன்றி கூறி மேலும், இலக்கியத்திற்காக படைப்பாளியாக அல்லாமல் பாடுபடுகிறவர் களையும், அடையாளம் காணப்படாத நல்ல படைப்பாளிகளை இனம் காட்டவும் சொற் கப்பலின் பயணம் தொடரும் எனக் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

- சா.ரு.மணிவண்ணன், பத்மநாபன்

நன்றி : கூடு

சொற்கப்பல் (விமர்சன தளம்) அமர்வு : 2 - கவிதை விமர்சன அரங்கு

சொற்கப்பல்
(விமர்சன தளம்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அமர்வு : 2 ஏப்ரல் 2010
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நாள் : 3.4.2010 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு,
(பாண்டிச்சேரி இல்லம் அருகில்), சென்னை-78.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நினைவரங்கம் :
----------------------------------------------------------------------------------
இலக்கிய வட்டம் காஞ்சிபுரம் வெ.நாராயணன்


வரவேற்புரை
---------------------------------------
முகுந்த், தடாகம்.காம்


சிறப்புரை
-----------------------------------------------------------------
''என் கதைகள் - நாடகம் - வாழ்க்கை''
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி


விமர்சன அரங்கு
-------------------------------------------------------------
சமீபத்தைய கவிதைத் தொகுதிகள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
1. முயல் போல் வாழும் காமம் - நீலகண்டன் / விமர்சனம் : கண்டராதித்தன்

2. புவன இசை - வெயில் / விமர்சனம் : அய்யப்ப மாதவன்

3. தனிமையின் இசை - அய்யனார் விஸ்வநாத் / விமர்சனம் : நிலாரசிகன்

4. வேட்கையின் நிறம் - உமாஷக்தி / விமர்சனம் : நரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------


நன்றியுரை
----------------------------------------------------------------
வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ்



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
---------------------------------------------------------
பொன்.வாசுதேவன், அகநாழிகை



வாசிப்பதற்கும், சுவாசிப்பதற்கும் அனைவரும் வருக !


சொற்கப்பல் அமைப்பாளர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------
அகநாழிகை - தடாகம்.காம் - தமிழ்மகன் - டிஸ்கவரி புக்பேலஸ்


தொடர்புகளுக்கு :
---------------------------------------------------------------------------------------------------------
பொன்.வாசுதேவன் - 9994541010 / அஜயன்பாலா - 98840 60274

முகுந்த் - 98407 67179 / வேடியப்பன் - 99404 46650

உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களை படைப்பாளிகள் புறக்கணிக்க வேண்டும் - விக்ரமாதித்யன் சூளுரை

தமிழ் படைப்புலகில் நிலவும் வறட்சியான விமர்சன சூழலைக்
கவனப்படுத்தியும், கவனப்படுத்தாத படைப்புகளின்
மீதான நேர்மையான விமர்சனங்களின் அவசியங்கருதியும்
‘சொற்கப்பல்‘ விமர்சன தளம் என்ற அமைப்பு
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ‘சொற்கப்பல்‘ அமைப்பின்
அறிமுக விழா மற்றும் ‘விளக்கு’ விருது பெற்ற
கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்குப் பாராட்டு விழா
சென்னையில் மார்ச் 6 அன்று நடைபெற்றது.

விருப்பு வெறுப்பற்ற விமர்சனங்களின்
அவசியத்தையும், சொற்கப்பல் அறிமுகத்தையும்
தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் படைப்புகளின்
மீதான விமர்சன நிகழ்வு ஒருங்கிணைக்கப்படும் என்பதையும் கூறி, பொன்.வாசுதேவன் வரவேற்புரை வழங்கினார்.

‘சொற்கப்பல்’ செயல்பாடுகள் பற்றியும்,விமர்சனங்களின்
முக்கியத்துவம் குறித்தும் அஜயன்பாலா
அறிமுகவுரையாகப் பேசினார். ‘விளக்கு’ விருது
பெற்ற கவிஞர் விக்ரமாதித்யன் பொன்னாடை
அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். வாழ்த்துரை வழங்கிய
கவிஞர் விக்ரமாதித்யன் பேசுகையில், "ஆதியில்
ஓசையிலிருந்து பிறந்த மொழியானது பாடல்களாகி
பின் உரைநடையாகியது. பின்னர் வசன கவிதை,
நவீன கவிதை என அதன் நீட்சி ஏற்பட்டது. விமர்சனம்
என்பது தற்போதைய சூழலில் போலியானதாக,
தனிப்பட்ட விருப்புகள் சார்ந்தே இருக்கிறது.
திரும்பத் திரும்ப குறிப்பிட்ட படைப்பாளிகளை
முன்னிறுத்திப்பேசி தமிழில் வேறு படைப்பாளிகளே
இல்லை என்பது போன்ற போலியான தோற்றம்
ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பொய்த் தோற்றத்தை
ஏற்படுத்தியதில் இலக்கிய இதழ்களின் பங்கு அதிகம்.
காலச்சுவடு, உயிர்மை போன்ற பத்திரிகைகள்
தமிழ் இலக்கியத்தைக் கையில் எடுத்துக்கொண்டு
அதன் போக்குகளை நிர்ணயம் செய்கிற அதிகாரத்துடன் செயல்படுகின்றன.தி.மு.க. அல்லது அ.தி.மு.க. என
அரசியலில் கட்சிகள் இருப்பது போலவே,
இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே
படைப்பாளிகளின், வாசகர்களின் செயல்பாடுகள்
அமைந்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் ஒன்று.
காலச்சுவடு கட்சியைச் சேர்ந்தவராகவோ அல்லது
உயிர்மையைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள்.
படைப்பாளிகளை சார்பு நிலையில் செயல்படச் செய்யும்
இப்படியான இலக்கியப் போக்கு தொடர்வதை நாம் புறக்கணிக்க வேண்டும்" என்று பேசினார்.

தொடர்ச்சியாக, அமிர்தம் சூர்யா எழுதிய
‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’ சிறுகதைத்
தொகுதி மீதான வே.எழிலரசு அவர்களின் விமர்சனம்
மற்றும் சந்திரா எழுதிய ‘காட்டின் பெருங்கனவு’
சிறுகதைத் தொகுதி பற்றிய அசதா மற்றும் காலபைரவன்
ஆகியோரின் விமர்சன நிகழ்வும் நடைபெற்றது.
விமர்சனத்தையொட்டி கேள்விகளும், உரையாடலும்
நடைபெற்றது.

நிகழ்ச்சியின் நிறைவில் வேடியப்பன் நன்றியுரை வழங்கினார்.

அஜயன்பாலா, பொன்.வாசுதேவன் (அகநாழிகை), முகுந்த் (தடாகம்.காம்), வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) ஆகியோர் சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தனர்.

- பொன்.வாசுதேவன்

நன்றி : உயிரோசை இணைய இதழ்

சொற்கப்பல் - தமிழ் அலை - டிஸ்கவரி

சென்றவாரம் டிஸ்கவரி புக் பாலஸில் இரண்டு
புத்தகங்கள் விமர்சனம் நடந்தது..முகப்புத்தக
நண்பர் அஜயன் பாலா சொற்கப்பல் என்ற விமர்சன
தளத்தை அறிமுகம் செய்ய அழைத்து இருந்தார் ..
செல்ல நினைத்து சில வேலைகளால் செல்ல
இயலவில்லை..வரவேற்புரை அகநாழிகை பொன் .
வாசுதேவனும் அறிமுகம் அஜயன் பாலாவும்..
விளக்குபரிசு பெற்ற விக்கிரமாதித்யனுக்கு சொற்
கப்பல் சார்பாக டிஸ்கவரி புக் பாலஸின் உரிமை
யாளர்கள் முகுந்தும் வேடியப்பனும் பொன்னாடை
போர்த்தினார்கள் ,, சொற்கப்பலின் மாலுமிகள்
தமிழ்மகன் ., அகநாழிகை.,தடாகம்.காம் டிஸ்கவரி
புக் பேலஸ்....

அந்த விழாவில் விக்கிரமாதித்தன் அவர்கள் பேசி
யதில் இருந்து ..உயிர்மைகாலச்சுவடு போன்ற
பத்திரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டும்..
ஏனெனில் அவை பதிப்பிடும் குறிப்பிட்ட சிலதையே
இலக்கியம் என்றும் குறிப்பிட்ட சிலரால் எழுதப்படு
பவையே இலக்கியம் என்று கருதும் மனப்பான்மை
தான் காரணம் என்று கூறினார் ...என்று செய்தி
வந்தது..சொற்கப்பலின் முதல் கூட்டமே களை
கட்டிவிட்டது.. வாழ்த்துக்கள்..!!அஜயன் .,அகநாழிகை
வாசுதேவன்., தடாகம்.காம் .,தமிழ்மகன் மற்றும்
டிஸ்கவரி புக் பேலஸ்...!!!

சொற்கப்பல் (விமர்சன தளம்) அறிமுகக் கூட்டம் & சிறுகதை விமர்சன அரங்கு


நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் , 6 மகாவீர் காம்பளக்ஸ் ,முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கேகே.நகர் சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650
,

வரவேற்புரை :
பொன். வாசுதேவன்

சொற்கப்பல் (விமர்சன தளம்) ஒரு அறிமுகம் :
அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல்
முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி


நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்

நூல் :1 அமிர்தம் சூர்யாவின் கடவுளை க்கண்டுபிடிப்பவன்

விமர்சகர்கள் :
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்

நூல் : 2 சந்திராவின் காட்டின் பெருங்கனவு

விமர்சகர்கள் :
அசதா
காலபைரவன்

நன்றியுரை :
வேடியப்பன்


சொற்கப்பல் அமைப்பாளர்கள் :
தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்